இந்தி திணிப்பு பற்றி பேசி வரும் உதயநிதி ஸ்டாலின் எதற்காக இந்தி படத்தை விநியோகிக்கின்றார் என்று தமிழக பா.ஜ . தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போது எல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும். 1965ல் இருந்து இதனை தமிழ்நாட்டில் பார்த்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக திமுக செய்த சாதனை, தமிழ்நாட்டில் […]

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலை தூக்கி வருவதால் சாமானிய பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பலுசிஸ்தானின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் முகமது நூர் மெஸ்கன்ஷி இவர் ஹரன் என்ற பகுதியில் தொழுகை நடத்திக் […]

ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனி டுவிட்டரில்பதிவிட்டுள்ளார். நேற்று முன்தினம் சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு சதீஸ் என்பவர் கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் அவர் கைது […]

கொசுக்கள் எங்கிருந்தாலும் மூலை முடுக்குகளில் தேடித் தேடி கொசுக்களை வேட்டையாடி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஊரெங்கும் டெங்கு காய்ச்சல் பரவுவதை ஒட்டி அறிவயல் பூர்வமாக உத்திக் கொண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக கொசுக்களை பிடித்து பி.சி.ஆர் சோதனை நடத்தி வருகின்றனர். டெங்கு நோய் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் மூலமாக பரவுகின்றது. எனவே அதைப் பிடித்து வைரஸ் இருக்கின்றதா என பி.சி.ஆர் சோதனை செய்து வருகின்றனர். […]

இண்டிகோ விமானத்தில் இசையமைப்பாளர் கரப்பான்பூச்சி இருந்ததை வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டதை தொடர்ந்து விமான நிறுவனம் மன்னிப்புகோரியுள்ளது. இசையமைப்பாளர் ரிக்கி கெஜ் , பாட்னாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது கரப்பான்பூச்சி இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை வீடியோ எடுத்த இசையமைப்பாளர் ரிக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் டுவீட் செய்துள்ளார். ’’ அக்டோபர் 13ம் தேதி பாட்னாவிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது ஒரு […]

வாரத்தின் ஐந்து நாட்களிலும் வர்த்தகம் இயங்கும் நிலையில் தீபாவளி அன்று தேசிய பங்குச்சந்தை  மற்றும் கமோடிட்டி சந்தை ஆகியவற்றிற்கு பொது விடுமுறை  ஆனால் தீபாவளியை ஒட்டி சிறப்பு வர்த்தகமாக முஹுரத்  வர்த்தகம் ஒரு மணி நேரம் செயல்படும். தீபாவளி முஹுரத் வர்த்தக நாளில் வர்த்தகத்தை தொடங்குவது ஆண்டு முழுவதும் செழிப்பையும் செல்வத்தை தருவதாக நம்பிக்கை உள்ளது. எனவே அந்நாளில் புதிய பங்குகளை வாங்குபவர்கள் அதிக ஆர்வத்துடன் பங்குகளை வாங்குவார்கள். எனவே […]

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கின் ஹாரிபாட்டர் கதைகளின் ஒளி வடிவமாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம்  நடித்திருந்த ராபி கால்ட்ரேன் என்பவர் மறைந்தார். மாயாஜால உலகை முக்கிய கதைக்களமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. உலகின் பைபிளுக்கு அடுத்தபடியாக விற்பனையான புத்தகம் ஹாரிபாட்டர். பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றதால் இதை ஒளிவடிவில் தயாரிக்கப்பட்டது. இதில் சிறுவனாக டேனியல் ராட்கிளஃப் என்பவர் நடித்தார். இது மொத்தம் 8 பாகங்களைக் […]

ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட துணை நடிகை தாக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மணிகண்டனின் ஆதரவாளர்கள் சாந்தினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் நடத்தக்கூடாது எனவும் உடனடியாக இடத்தை விட்டு நகரும்படியும் அவர்கள் கூறினர். இதனால் […]

இங்கிலாந்து பிரதமராக மீண்டும் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் , பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்ட லிஸ்ட்ரஸுக்கு அதிகப்படியான எதிர்ப்புகள் கிளம்புகின்றது. எனவே அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு வருவதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றனது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் பிரதமராக பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் […]

ஏற்கனவே நாட்டில் உள்ள மொத்த பிக்பஜாரையும் கைக்குள் கொண்டு வந்த அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ’மெட்ரோ’வை வாங்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நவீன வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் சில்லறை வரத்தகத்தின் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ‘மெட்ரோ’வை வாங்க உள்ளது. இந்நிறுவனம் ஜெர்மனி நாட்டின் மொத்த விற்பைன நிறுவனாக உள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம் 34 நாடுகளில் வெற்றிக்கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றது. இதை ரூ.8000 கோடிக்கு […]