90-வது இந்திய விமானப்படை தின நாளில் விமானப்படை வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படைதளத்தில் 90வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர். மேலும் 90வது ஆண்டு நாளான இன்று வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டது. விங் கமாண்டர் குணால் கன்னா மற்றும் விமானப்படைஅதிகாரிகள் சீருடையை அறிமுகப்படுத்தினார்கள். முதல் முறையாக போர் டி-ஷர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விமானப்படை ஸ்டாண்டிங் டிரஸ் கமிட்டி […]
அமெரிக்காவில் தன் மகனை விவாகரத்து செய்வதால் மருமகளை மாமனால் சுட்டுக் கொன்றார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சிதல் சிங் அவரது மருமகள் குர்ப்ரீத் கவுர் என்பவரை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்தார். கடந்த வாரம் இச்சம்பவம் நடந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவருடைய காரில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை […]
தமிழக அரசுமருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால்மக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் போதையில்லா தமிழ்நாட்டை உருகூாக்கும் வகையில் மாரத்தான் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ’ தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் , மக்கள் தைரியமாக புகார் அளிக்க […]
இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இன்று சண்டிகரில் இதற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில் , நமது முன்னோர்களின் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பெருமை மிக்க பாரம்பரியத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தினத்தில் […]
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் துணிவு .. இந்த திரைப்படத்தில் 3 வது முறையாக இயக்குனர் எச்.வினோத் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூருடன் கைகோர்த்துள்ளார் நடிகர் அஜித். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய முன்னணி நாயகியாக களம் இறங்கியுள்ளார். இதனால் இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்துக் […]
ரயிலில் தூங்குவதற்கான விதிமுறையை மாற்றி ஐஆர்சிடிசி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பயணத்தின் போது நீங்கள் ஒரு போதும் இந்த தவறை செய்துவிடாதீர்கள்.. சிறிய தவறு கூட பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அனைத்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இரவு நேரத்தில் பயணிகள் தூங்குவது பற்றிய அறிவிப்பை ஏற்கனவே ஐஆர்சிடிசி வெளியிட்டது பற்றி அனைவரும் அறிந்திருப்போம்..சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருந்த புதிய […]
இறப்பிற்கான காரணங்கள் குறித்த ஆய்வில் கடந்த 2020 ம் ஆண்டில் 46 நாடுகளில் புற்றோய் இறப்புக்கான மூன்று காரணங்களில் முதலாவதாக கல்லீரல் புற்றுநோய் உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியானது. வரும் 2040 ம் ஆண்டில் இறப்பு மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இதை விட 55 சதவீதம் அதிகமாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு தொடர்பாக ஹெபட்டாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. […]
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய நவீன உலகில் வாழ்க்கை முறையில் மட்டுன்றி, உணவுப் பழக்கவழக்கங்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள உணவுகளுள் பெரும்பாலானவை ஆரோக்கியமற்றதாகவே உள்ளன. அதோடு ஒரு நாளில் ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடும் உணவுகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக சிலர் இரவு நேரங்களில் தவறான […]
லக்னோவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. லக்னோவில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. மழை குறுக்கிட்ட நிலையில் போட்டி தொடங்க தாமதம் ஆனது. எனவே […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 பேரை கணவராக ஏற்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். வடிவேலு சினிமா பாணியில் 4 கணவரையும் ஒரே நேரத்தில் அழைத்து வைத்து பஞ்சாயத்து செய்தனர். ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த ஒருவர் மற்றும் கருப்பூர் பகுதி சேர்ந்த 2 டிரைவர்கள் மற்றும் ஆம்பூரை சேர்ந்த ஒரு டிரைவர் என 4 பேருடன் அடுத்தடுத்து குடும்பம் நடத்தி உள்ளார். […]