நடிகர் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ் ’ திரைப்படம் வெளியிடப்படும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ‘டான்’ திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் […]
அந்த நாட்கள் வேதனையானவை என்று விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்த நாட்களை குறிப்பிட்டு ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டியர் காம்ரேட். தெலுங்கு படமான இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது. இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகாவின் முத்தக்காட்சி பேசும் பொருளானது. இணையத்தில் […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தியதாக சசிதரூர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகின்றது. வரும் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் இடையே நேரடி போட்டிஉள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கட்சியின் மேலிட […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு உற்சாகமாக உள்ளது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயம்ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையிடப்பட்டு வருகிறது. உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது படம் குறித்தும், படத்தில் […]
குவைத்தில் வேலை பார்த்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காப்பாற்றுமாறு கோரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது… சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த புவனா (37) இவரது கணவர் ஜேம்ஸ்பால். இவரது நண்பர் ஜான்சன் என்பவரின் அறிவுரைப்படி குழந்தை பராமரிப்பு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சேர கூடுதல் பணம் அவசியம் இருக்காது எனக்கூறியதால் புவனா இந்த வேலைக்கு சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் ஒருமாத்திலேயே […]
ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் முன்பை விட தற்போது பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது என அமித்ஷா பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றார். ரஜோரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர்அங்கு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , ’’ஜம்மு காஷ்மீர் […]
ஜம்மு-காஷ்மீரில் கொலை செய்யப்பட்ட ஹேமந்த்குமார் கொலைக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் டிஜிபி ஹேமந்த் காலை கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றியது. அமித்ஷா இன்று பேரணி செல்ல இருந்த நிலையில் போலீஸ் உயரதிகாரி கொலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி […]
அரசுப் பேருந்துளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என பெண்கள் விரும்பும்பட்சத்தில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என போக்குவரத்த துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. எனவே தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் முதல் 5 திட்டங்களில் அவர் கையெழுத்தில் பெண்களுக்கான இலவச பயணம் இருந்தது. […]
பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்ந்த ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரை அரங்கங்கள் நிரம்பி வழிவதால் தமிழ் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகின்றன. லைகா தயாரிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து 4 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கு வசூலில் சாதனை செய்துள்ளது. என கூறப்பட்டு வருகின்றது. அத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீதுள்ள ஆர்வத்தால் மக்கள் நாளுக்கு நாள் […]
உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 30 வீரர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக வரும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் திரௌபதி கா தண்டா – 2 என்ற சிகரத்தில் உத்தரகாசி பகுதியில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 29 வீரர்கள் மலை ஏறச் சென்றனர். அப்போது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 பேரும் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து எஸ்.டி.ஆர்.எஃப் ராணவம் மற்றும் ஐ.டி.பி.பி. பணியாளர்களால் மீட்பு […]