திருச்சி மலைக்கோட்டை அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் மாநகரையே பரபரப்பாக்கிய பலூன் வியாபாரியை நீதிமன்றக் காவலில்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நேற்று முன்தினம் ஜவுளி கடை வாசலில் ஹீலியம் பலூன் விற்றுக் கொண்டிருந்தார் அனார் சிங் என்ற உத்தரபிரதேச வியாபாரி. அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சிலிண்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் […]

தாய்லாந்தில் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியானமருக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் உள்பட 300 இந்தியர்கள் மியான்மரில் இது போல சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக […]

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் கஞ்சாவில் 2000 வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கி உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சாபுழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏற்படும் குற்றங்களிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஆபரேஷன் கஞ்சா கடத்தல் மற்றும் இதை பயன்படுத்துவதற்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில்இந்த வேட்டை நடத்தப்பட்டது. […]

கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது சலுகைதானே தவிர உரிமை அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் அனுஸ்ரீ என்பவரது தந்தை அரசு பணியாளர். இவர் திருவாங்கூர் பகுதியில் உரம் மற்றும் இரசாயன கழகத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். இவர் 1995ல் தனது பணிக்காலத்திலேயே உயிரிழந்தார். இவரதுமனைவியும் கேரளா அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் மனைவிக்கு கருணை அடிப்படையில் அவரது வேலையை தரவில்லை. எனவே தந்தை […]

உத்தரபிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில்  வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதை செய்தது அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் என்பது அதை விட அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கொடூரமான வன்புணர்வுக்கு ஆளான […]

ஜம்ம காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறைத்துறை டிஜிபியான ஹேமந்த் குமார் லோஹியா , ஜம்முவின் புறநகர் பகுதியில் உதய்வாலா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். டி.ஜி.பி. இருந்த வீட்டில் வேலை […]

கோவையில் நடு ரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இடையர் வீதியில் பேக்கரி அருகே இரவு நேரத்தில் சில இளைஞர்கள் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அவர்களின் வீடியோவை பதிவு செய்து சிலர் அதை சமூக வலைத்தலங்களில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலானது. இது குறித்து வெறைட்டிஹால் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியால் […]

ஒரு மனிதனின் வாழ்நாள் முடிவதற்கு இருதய நோய் ஒரு முக்கியமான காரணம். இது அனைத்து வயதினரையும் தாக்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுடையவர்களை அதிக அளவில் தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவான நோய் வகைகளில் கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், இதயத் தடுப்பு, இதய செயலிழப்பு, அரித்மியா, புற தமனி நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும். நவீன காலகட்டத்தில் பரபரப்பான  வாழ்க்கையுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை தேர்வுகள்  […]

பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் முக்கிய உணவாகும். பாக்டீரியா நொதித்தல் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது தயிர் ஒரு தடிமனான அமைப்பை அளிக்கிறது. கிரீம், சுவையான தயிர் அல்லது தயிர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தயிர் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. தயிரில் உள்ள புரோபயாடிக் […]

வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல எவ்வளவு மழை பெய்யுமோ அந்த அளவிற்கு இயல்பான அளவில் மழை பெய்யும் . பருவமழை காலத்தில் இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை […]