திருச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் குறித்த வழக்கில்இதுவரை ஒரு சிறு துப்புகூட இதுவரை கிடைக்கவில்லை. திமுகவின் மூத்த தலைவரும் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு ஒரு நாள் நடைபயிற்சிக்கு சென்றபோது கொடூரமாக கொலை செய்து வீசிச் சென்றனர். இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்ற வருகின்றது. அதிமுக ஆட்சியின் போது இந்த […]
கேரள மாநிலம் இடுக்கி அருகே காட்டில் இருந்து வெளியேறிய யானைகளிடம் சிக்கிய இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறி உயிர் தப்பினார். கேரளாவில்அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள்வெளியேறி குடியிருப்புபகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தது. அப்போது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷாஜி என்பவர் யானையை கவனிக்கவில்லை. […]
சென்னை அருகே பிரபல ரவுடியை மனைவியின் கண்முன்னே சரமாரியாக கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே மறைமலை நகரின் தைலாவரம் பகுதியில் வசித்து வந்தவர் சேகர் (28). இவர் கஞ்சா , கொலை வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியாவார். பல கொலைகளில்தொடர்புடையதால் இவருக்கு எதிரிகள் அதிக அளவில் இருந்துள்ளனர். இதனால் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகர் தைலாபுரத்தில் மாமியார் […]
சின்னத்திரை சீரியல்களில் நீண்ட காலம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் ஒன்று தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வரவுள்ளது. சன்டிவியில் பிரபலமான சீரியல்களில் நெடு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் வள்ளி , கல்யாண பரிசு , கோலங்கள் , வாணி ராணி போன்ற பிரபல சீரியர்கள் 1500 எபிசோட்கள் வரை ஒளிபரப்பப்பட்டது. விஜய்டிவியின் சரவணன் மீனாட்சி(1901 எபிசோட்) , சன்டிவியின் வள்ளி (1961)ஆகிய நெடுந்தொடர்கள் 1900 எபிசோட்கள் ஒளிபரப்பானது. இதுவரை […]
விஜய் டிவில் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ராமர்.. தற்போது முன்பைப் போல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றாததால் ராமரை விஜய் டி.வி. ஒதுக்குகின்றதா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் டி.வி.யின் அனைத்து ஷோக்களிலும் ராமர்இருப்பார். ஆனால் தற்போது ராமரை பார்க்கவே முடிவதில்லை. ’’என்னம்மா இப்படி பண்ட்றீங்களேம்மா’’ என்ற வசனத்தை நகைச்சுவையாக மாற்றிய ராமர் பின்னர் பெண் வேடங்களில் நடித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் போல நடித்து […]
வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு குரல் கொடுத்ததற்காக கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் பரிசு ஒன்றை வழங்கினார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆதரவாக கூல் சுரேஷ் தனிப்பட்ட முறையில் சிம்புவுக்காகவும் , படம் வெற்றியடையவும் புரோமோஷன் செய்து வந்தார் ’’ வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு’‘ என்பது போன்ற வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இதற்காகவே பலர் படத்தை பார்த்தனர் எனக்கூறலாம். படத்தின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு இயக்குனர், […]
உத்தரபிரேத மாநிலத்தில் தவறாக உச்சரித்ததாக கூறி பள்ளி ஆசிரியர் இரும்புக் கம்பியைக் கொண்டு மாணவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்புபள்ளி மாணவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிகித் டோஹ்ரே என்ற அந்த பள்ளி மாணவர் சமூக அறிவியல் பாடத்தில் ஒன்றை வாசித்துக் காட்டும் போது தவறான உச்சரிப்பை பயன்படுத்தியுள்ளளார். இதனால் […]
காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்துவதில் என்ன தவறு உள்ளது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனாரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ’’குண்டு வீச்சு சம்பவமும் ,வன்முறை சம்பவங்களும் நடைபெறக்கூடாது, எந்த மாநிலமாக இருந்தாலும் சரி பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். ஒரு மாநிலத்தில் சமய […]
கூடுதலாக 100 ரூபாய் கூலி பெற்றதால் சக நண்பர்கள் ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கட்டிடத் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் 10வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 22 வயது ஆனந்தன் என்பவர் கட்டிட வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், பிரசாந்த் , […]
ஜெய்பூரில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றார்.. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனோகர். இவரது 20 வயது மகள் ரக்சயா . கல்லூரிப்படிப்பை முடித்துள்ள நிலையில் சிறு வயதில் இருந்தே அழகிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல் பகுதி நேர வேலையை செய்து அழகிப்போட்டிக்கு தன்னை […]