காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிருப்தி தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என 23 தலைவர்கள் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பினர். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக […]

உணவு டெலிவரி செய்யும் ’’சோமேட்டோ’’ தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் உணவு டெலிவரி செய்யும் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். டெல்லியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. சனிக்கிழமை இரவு ’’சோமேட்டோ’’-வில் உணவு டெலிவரி சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியபோது ’’ நாங்கள் தற்போதைக்கு உணவு ஆன்லைன் டெலிவரி சேவையை வழங்குவதில்லை’’ ’’விரைவில் வருவோம்’’ என்ற வாசகம் பரவத் தொடங்கியது. 3 நாட்கள் ஆகியம் இன்னும் […]

எண்ணற்ற பயன்கள் நாம் சாப்பிடும் ஒரு முட்டையில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செலினியம் , விட்டமின் டி, பி 6, பி12 மற்றும் துத்தநாகம்  , இரும்பு , தாமிரம் போன்ற தாதுக்கள் மற்றும் புரதச்சத்துக்களின் மூலமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகின்றது. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்களின் களஞ்சியமாக முட்டை வரையறுக்கப்படுகின்றது. கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் […]

கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசி வருவதையடுத்து பெட்ரோலை கேன்களில் விற்பனை செய்யக்கூடது என்று மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, மதுரை , ராமநாதபுரம் , உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் , பாஜவினர். , நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு […]

சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பெயர் சூட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பேசி வருகின்றார். அதில் இன்று பேசியபோது செப்டம்பர் 28ம் தேதி வீரர் பகத்சிங்கின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்தில் பகத்சிங் விமான நிலையம் என பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார். […]

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவவர் சோனியா காந்தியுடன்  டெல்லியில் சந்தித்தனர்.  வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். பீகாரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் […]

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு  வேட்புமனுவை மூத்த தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுக்களை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் […]

திருப்பதி அருகே புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவரும் அவரது 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் கார்த்திகேயா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டது.  மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் இந்த மருத்துவமனையை கட்டியுள்ளார். மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் மருத்துவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த மருத்துமனையில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து […]

புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா . உலகம் முழுவதும் வெற்றியைக் கொடுத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்தியில் வெளியான திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கு மேல் சாதனை செய்துள்ளது. இதனிடையே இரண்டாம் பாகம் வெளியாவது பற்றிய எதிர்பார்பபில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் புஷ்பா இரண்டாம் […]

நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதாக சமுக வலைத்தலங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் பரவி வருகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்தவாரம் திரைக்கு வர உள்ளது. இதனால் திரைப்படத்தை ப்ரொமோட் செய்யும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா […]