செப்டம்பரில் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முக்கியத் தீர்மானமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக […]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் உடட 51 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் […]

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. விழா நாளான நாளை (ஜூலை 7, 2025) பக்தர்கள் வெள்ளம் பெருகும் நிலையில், கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோவிலுக்கு முன்புள்ள கடற்கரையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் இணைந்து, […]

சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிறு கிழமை என்பதால் குறைவான ஊழியர்கள் மட்டும் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் […]

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க தலைமை நிர்வாக குழுவில் அன்புமணி […]