சிவகாசி அருகே கோலுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் கோலுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் உள்ளே பல […]

நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நம் இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவற்றில் உள்ள ரசாயனங்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கின்றன. அப்படியானால் அந்த விஷயங்கள் என்ன? அவற்றின் ஆபத்துகள் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம். இதய நோய் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயதைப் பொருட்படுத்தாமல், இளைஞர்களும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கிய […]

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மென்பொருள், மனிதவள மற்றும் கிரியேட்டிவ் துறைகள் அதிகம் பாதிப்பு. IBM, Microsoft உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான பணிநீக்கங்கள் செய்துள்ளன. 2025ஆம் ஆண்டு தொழில்நுட்ப உலகத்திற்கு பெரும் சோதனைக் காலமாகவே அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்ததன் விளைவாக, உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை Futurism என்ற பிரபல தொழில்நுட்ப ஊடகம் வெளியிட்டுள்ளது. நிரந்தரமான தொழில்களாகக் […]

தெலுங்கானாவின் சங்காரெட்டியில் உள்ள சிகாச்சி குளோரோ கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடி விபத்து நடந்த தொழிற்சாலைக்குள் 61 பேர் சிக்கியிருந்துள்ளனர். 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு […]

swiggy, zomato போன்ற நிறுவனங்கள் கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் உணவு வழங்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நவீன வாழ்க்கை முறைமையில், வீடிலிருந்தபடியே உணவு வாங்கும் வசதியால் ஆன்லைன் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்துள்ளன. ஆனால் சமீப காலமாக ஆன்லைன் தளங்களில் உணவுகளின் ரேட் அதிகரித்து வருகிறது. மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன. அதே […]