திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அப்படி திருப்பதி ஏழுமலையானின் மறு உருவமாக அமைந்திருக்கும் ஒரு கோவில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள், திருமணத்திற்காக குபேரனிடம் பெற்ற கடனுக்காக ஒரு கட்டத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். அப்போது அந்த கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்த புனிதத்தலம் தான் சில்பூர் புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில். இந்த கோவில் தெலுங்கானா மாநிலம் […]

இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை சட்ட விரோதமாகக் கூறி, அதைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், “அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மக்கள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நெடுஞ்சாலையில் பயணிக்க பணம் வசூலிப்பது ஒரு சட்டவிரோத […]

நவீன வாழ்க்கை என்பது இன்று வேகத்தின் மேல் இயங்கும் ஒரு சக்கரமாகவே மாறிவிட்டது. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கும் இன்றைய மனிதன், எல்லா செயல்களையும் உடனடியாக முடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வாழ்கிறான். இதில் சமையலும் விதிவிலக்காக இல்லை. ஆண்-பெண் பேதமின்றி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், காலையில் எழுந்தவுடன் உணவு தயாரித்தல் ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. காலை உணவு மட்டுமல்லாமல் மதிய உணவையும் தயாரிக்க வேண்டிய கட்டாயம், […]

உங்கள் நண்பர்களுடன் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசியவுடன், அது திடீரென்று உங்கள் Facebook, Instagram அல்லது YouTube போன்ற செயலிகளில் தோன்றுவதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஆம் எனில், அது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக ஊடக பயன்பாடுகள் உங்கள் பதிவுகளை மட்டுமல்ல, உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றன என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது… UK ஆராய்ச்சி நிறுவனமான Apteco-வின் சமீபத்திய அறிக்கையின்படி, Facebook, Instagram, YouTube […]

கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை கனமழை பெய்தது. அதன் பிறகு வானிலை அடியோடு மாறியது போல, மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் கொளுத்தியது. குறிப்பாக சென்னை, […]

இப்போதெல்லாம் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. அப்படி ஒரு வேலை கிடைத்தாலும், நகரங்களில் சம்பளம் குறைவு, செலவுகள் அதிகமாக இருக்கும். வேலைகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பல இளைஞர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தேனீ வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.. தேனுடன் சேர்த்து, அவற்றிலிருந்து பெறப்படும் பிற பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் […]

விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை பணத்தை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த வீரதுர்கா நீலிமா (26) என்பவர், திருமணம் முடிந்த பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் ஆண்கள் மீது பரிதாபம் காட்டும் போல் பழகி, நெருக்கம் காண்பித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன் வலையின் […]

2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை கைது செய்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, தெற்கு வசிரிஸ்தானில் நடைபெற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினருடனான மோதலில் உயிரிழந்துள்ளார். 37 வயதான மேஜர் ஷா, பாகிஸ்தானின் உயர்நிலை சிறப்பு சேவைக் குழுவான SSG பிரிவில் பணியாற்றி வந்தவர். TTP தாக்குதல்களைத் தடுக்க முன்னணி பதவியில் செயல்பட்டபோது, லான்ஸ் நாயக் ஜிப்ரானுல்லாவுடன் இணைந்து […]

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]