fbpx

சென்னையில் மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ், பிளம்பர் வேலை பார்த்து வருகின்றார். அவருடைய மனைவி கவுசல்யா வீட்டில் குழந்தையை பார்த்துக் கொண்டு வருகின்றார். வழக்கம் போல் யுவராஜ் மனைவியிடம் குழந்தையை …

கோவையில் ஒரு வாரத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்னர் இதுவரை வேலையும் பார்க்கவில்லை. கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கின்றது.ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க போகின்றேன். ஒரு வாரத்தில் சாலையை சீரமைக்கவில்லை …

தமிழில் மருத்துவ படிப்பிற்கான பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இதுவரை 7 பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில்,  “முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், 7 புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது” …

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாமற்றும் துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை நவம்பர் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி …

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் மாற்றங்கள் ஏற்படுவதுபற்றிய தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு இங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு …

மதுரையில் ஆப்பிள் ஹெட்செட்டுக்கு ஆசைப்பட்டு சென்ற நபரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). மர வேலை செய்து வரும் இவர் ’பப்ஜி’ விளையாட்டு மீது இருந்த மோகத்தால் அறிமுகம் இல்லாத நபருடன் விளையாடி வந்துள்ளார். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியைச் சேர்ந்த வினோத், தினேஷ், சின்னமணி, இந்துகுமார் …

ரசிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார் …

தமிழ்சினிமாவில் பிரபலநடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படத்திலும் , மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புதோற்றத்திலும் நடிக்கின்றார்.

ஒரு …

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தொடர் மழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் மழையால் …

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு காரணம் பள்ளி நிர்வாகம் எனக்கூறி பெரும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளியை திறக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக வழக்குப் …

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா அவசர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் என்கின்ற அளவுக்கு உயர்ந்துள்ளவர் மகேஷ் பாபு. இவரின் தந்தை மூத்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை 1.15 மணியளவில் அவருக்கு …