fbpx

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்காலில் மழை விடாமல் பெய்து வருகின்றது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மரியாதை நிமித்தமாகவே ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன் என பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வந்தார். அவர் ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அங்கு அவரை …

சமீபத்தில் ’ஓ பாரி’ என்ற ஆல்பம் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் கடவுள் மந்திரத்தை அவமதிக்கும் வகையில் பாடல் இயக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது ஆல்பம் பாடல்களை இயக்க தொடங்கி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் ஆல்பம் பாடல் …

திருப்பூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவி காதல் விவகாரம் அப்பாவுக்கு தெரிந்துவிட்டதென பயந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் படியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது 17 வயது மகள் ஆனந்தி திருப்பூர் பழை பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சாலையில் நீட் பயிற்சி …

சென்னையில் மழை பெய்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டுள்ளனர்.

சென்னையில் பெரம்பூர் அருகே பேரக் சாலையில் 24 வயது இளம்பெண் பிரீத்தி  சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பாதாள சாக்கடை திறந்திருந்தது. இதை அறியாத அந்த பெண் அந்த குழிக்குள் தவறி …

ஒரு நாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிப்பதாகவும் கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி மக்கள் நீதிமய்யம் கட்சி அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

பருவமழை தொடங்கியுள்ளதாலும், வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்துவாங்குகின்றது. 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என கூறப்படும் நிலையில் …

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு ! வெள்ள பாதிப்பு வராது…ஆட்சியர் உறுதி!!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வெளியேறிக்கொண்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் தண்ணீர் …

வங்கதேசம் –இந்தியா இடையான டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் கொடுக்கப்பட்ட 151 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் வங்கதேச அணி தோல்வியடைந்தது..

டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த …

ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்ணை கண நொடியில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நடைமேடைக்கு ரயில் வந்து நின்றுள்ளது. பின்னர் புறப்பட்டவுடன் அந்த ரயிலில் ஏற வந்த பெண் கடைசி படிக்கட்டில் கால்வைத்தபோது ஸ்லிப் …

சென்னையில் பதினைந்து வயது பள்ளி மாணவி தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ரமேஷ்-வசந்தி தம்பதியினரின் ஒரே மகள் நந்தினி. திடீரென இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு நந்தினியை அழைத்துச் சென்றனர். …