நிலம் மற்றும் மனை விவகாரங்களில் துல்லியமான தகவல் மற்றும் நேர்மையான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் நோக்கத்துடன், தமிழ்நாடு பதிவுத்துறை தொடர்ந்து பல்வேறு டிஜிட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவுகளை ஆன்லைன் மயமாக்கி, இடைத்தரகர் சிக்கல்கள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும் பணியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கீகாரமற்ற மனைகள் தொடர்பான விவகாரங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளமான www.tnlayoutreg.in தற்காலிகமாக செயலிழந்தது. இந்த தளத்தின் செயல்திறன் குறைபாடுகள் காரணமாக, […]
இந்தியாவின் திருத்தல மரபில், ஒவ்வொரு சிவஸ்தலமும் தனித்துவமான வரலாறையும் ஆன்மிக மகிமையையும் தாங்கி நிற்கிறது. ஆனால் அந்த இடங்களில் சிலவே, உண்மையிலேயே பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயங்களைக் கொண்டுள்ளது. அந்த வரிசையில், ஆந்திரா மாநிலத்தின் பீமவரம் அருகே உள்ள யனமதுரு என்ற சிறிய கிராமம், உலகில் எங்கும் காண முடியாத ஒரு அபூர்வக் காட்சியை வழங்குகிறது. சிவபெருமான் தலைகீழாக காட்சி தரும் கோவில். புராணக்கதைகளின்படி, சம்பாசுரன் எனும் அரக்கன், பிரம்மனால் […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, அடுத்த 3 மாதங்களில் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் (basis points) வட்டி விகிதத்தில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதையடுத்து, தற்போது ரெப்போ விகிதம் 5.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, வங்கிகள் தங்களது கடன் வட்டி விகிதங்களிலும் […]
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் […]
நடிகர் முகுல் தேவின் கடைசி நாட்கள் எவ்வளவு சோகமானது என்பதை அவரது அண்ணனும், நடிகருமான ராகுல் தேவ் கூறியுள்ளார். டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் முகுல் தேவ். நடிகர் ராகுல் தேவின் தம்பியும் ஆவார். முகுல் தேவ் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒரு டிவி நடன நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப்போல ஆடி பரிசு பெற்றார். அவர், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் படித்து, பயிற்சி பெற்ற விமானியாகவும் இருந்தார். […]
மத்திய அரசின் வருவாய் துறை, புலனாய்வுத் துறை, சிபிஐ, போதைமருந்து தடுப்பு பிரிவு, தபால் துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளில் குரூப் ‘B’ மற்றும் ‘C’ வகை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தியுவரும் CGL (Combined Graduate Level) தேர்வு மூலம், 2025-ம் ஆண்டிற்காக மொத்தம் 14,582 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பு ஜூன் 9-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் […]
விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜ்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரது இறுதிச் சடங்குகளுக்கான […]
ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஈரான் அரசாங்கம் திங்களன்று ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் பெரும்பாலோர் மருத்துவம் மற்றும் மதத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆகும். தற்போதைய மோதலால் ஈரானிய வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நில எல்லைகள் அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக பயன்படுத்த முடியும் என […]
மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் ரயிலின் கழிப்பறையில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் அலறியப்படி வெளியேறினர். காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் […]
இந்தியாவில் 2011-க்குப் பிறகு நடைபெறும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, முழுமையாக டிஜிட்டல் வடிவத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் கட்டமான வீட்டுப்பட்டியலிடல் நடவடிக்கை (House Listing Operation – HLO), 2026 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வீட்டு வசதிகள், சொத்து உரிமை, வீட்டு வருமானம் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படும். இந்தக் […]