வின்ஃப்ராக்ஸ் சால்யூஷன்ஸ் (Winfrox Solutions) எனும் தனியார் ஐடி நிறுவனம், தற்போது வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய QA Engineer – Manual பதவிக்காக ஆட்கள் தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. Winfrox Solutions என்பது ஐடி சர்வீசஸ் மற்றும் கன்சல்டிங் சேவைகளில் செயல்படும் நிறுவனம். மேனுவல் டெஸ்ட்டிங் துறையில் ஆர்வமுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பணிக்கு 0 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்களும், அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். […]

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, அண்மைக்காலமாக இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரின் இந்த அணுகுமுறை, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்களின் மன உறுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் பிரிவினையையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாதுகாப்பு படைகளின் நேர்மைக்கு கேள்வி: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து […]

ஈரானின் 8 நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் அணுசக்தி மையங்களை குறைவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயர் அதிகாரிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் அழிவடைந்துள்ளன. இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் ரைசிங் லயன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, […]

அகமதாபாத் ர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நேற்று பிற்பகல் 1.17 மணியளவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 265 உயிரிழந்தனர்.  விமானம் விபத்துக்குள்ளான பிறகு, விமானத்தில் பயணம் செய்யும் […]

உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் வளர்ந்து வருகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, இஸ்லாம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும். 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 347 மில்லியன் (34.7 கோடி) அதிகரித்துள்ளது. ஆய்வின்படி, கிறிஸ்தவம் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் மதமாகக் கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் எந்த மத தொடர்பும் இல்லாத மக்கள் மூன்றாவது வேகமாக வளர்ந்து வரும் குழுவாக […]

மனிதனுக்கு உணவு என்பது உயிர்வாழ்வுக்கே அடிப்படை. அந்த உணவை சம்பாதிக்கவே நாம் பல வேலைகளைச் செய்து வருகிறோம். ஆனால் நம்மால் சமைக்கப்படும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவையா? என்பது பற்றி பலர் சிந்திக்க மறக்கிறோம். இப்போது பலரின் வாழ்க்கை முறை அவசரமானதாகிவிட்ட நிலையில், காலை அல்லது மாலை உணவை அதிக நேரம் செலவழிக்காமல், முன்பே சமைத்து வைத்ததை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் பழக்கம் உருவாகியுள்ளது. ஆனால் இப்படி செய்வதில் சில உணவுகள் […]

நாட்டையும் உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து குறித்து பிரபல ஜோதிடர் முன்கூட்டியே கணித்துள்ளார். குஜராத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நேற்று பிற்பகல் 1.17 மணியளவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. விடுதியில் மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த […]

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த SEPC என்ற தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படுகிறது என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்மீது தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது. தமிழகத்தில் […]

265 உயிர்களை காவு வாங்கிய அகமதாபாத் விமான விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு […]

மருத்துவ உலகம் நீண்ட காலமாக எதிர்நோக்கிய பிரச்சனை முன்பதியில்லாத ரத்த தேவை. இதற்கு தீர்வாக, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக செயற்கை இரத்தம் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இரத்தம் அனைத்து ரத்த வகைகளுக்கும் பொருத்தமானது என்றும், பரிமாற்றத்திற்கு முன் ABO/Rh வகை பொருத்தம் பார்ப்பதைத் தவிர்க்கச் செய்யக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பெரிய அளவிலான உற்பத்தி மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சாதனைகள் இருந்தாலும், விரிவான பயன்பாட்டிற்கு இது இன்னும் […]