தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் புதிய வியூகங்களுடன் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. 2021 தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அ.தி.மு.கவும், ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் தங்கள் கட்சிக்குள் கொண்டு வரும் வேலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. […]

தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற சகாப்தமாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் […]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாங் ஐலாந்து கடற்கரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு விசித்திரமான விலங்கின் உடல் ஒதுங்கியது. இதற்கு “மான்டாக் மான்ஸ்டர்” என்று பெயரிடப்பட்டது. இந்த விலங்கின் தோற்றம் மிகவும் வினோதமாக இருந்ததால், இது ஏதோ அரசு ஆய்வகத்தில் இருந்து தப்பி வந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினமாக இருக்கலாம் அல்லது இதுவரை யாரும் பார்த்திராத புதிய விலங்காக இருக்கலாம் எனப் பலவிதமான வதந்திகளும் கற்பனைகளும் […]

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (45). இவருக்கு மனைவியுடன் 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் தாயார் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மஞ்சுநாத், அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக மஞ்சுநாத் தனது மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்துள்ளார். பின்னர், மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, […]

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட காதல், இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த விநோதச் சம்பவம் இரு குடும்பங்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையின் சமரச முயற்சியால் இறுதியில் திருமணம் அரங்கேறியது. ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (24) என்ற இளைஞர் கூலி வேலை செய்து வருகிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தனது தாய்வழிப் […]

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாபி பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரூபிந்தர் கவுர் என்ற பெண்ணிடமிருந்து பஞ்சாப் காவல்துறையினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தனது கணவர் குர்விந்தர் சிங், தங்கள் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், […]

தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் ‘மிர்ச்சி’ மாதவி, சினிமா துறையில் தான் சந்தித்த மோசமான ‘காஸ்டிங் கவுச்’ அனுபவங்கள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். பிரபாஸின் ‘மிர்ச்சி’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மாதவி, ஒருமுறை தனக்கு வந்த அதிர்ச்சியூட்டும் அழைப்பு பற்றிப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “ஒரு நபர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘பிரகாஷ் ராஜுக்கு மனைவியாக நடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. […]

ஒவ்வொரு படத்திற்காகவும் தனது தோற்றத்தை மாற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்களில் நடிகர் மாதவன் முக்கியமானவர். இவர் சமீபத்தில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்திற்காக அதிகரித்த உடல் எடையை, அதிவேகமாக, எந்தவொரு தீவிரப் பயிற்சியோ அல்லது உணவுப் பிற்சேர்க்கைகளோ (Supplements) இல்லாமல் குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார். ‘ராக்கெட்ரி’ திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்திருந்த மாதவன், படப்பிடிப்பு முடிந்தவுடன் (2022-இல்) எடையைக் குறைக்கும் தேவை ஏற்பட்டது. இதுபற்றிப் பேசிய […]

தென்காசி மாவட்டம் ஊர்மேழகியான் கிராமத்தை சேர்ந்தவரும், செங்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞருமான முத்துக்குமாரசாமி (46), பகல் நேரத்தில் தனது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரசாமி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். போலீஸ் விசாரணையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்தச் […]

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி, மீண்டும் தங்கள் தாய் கழகமான அ.தி.மு.க-வில் இணைந்து வருவது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில், அ.ம.மு.க-வில் முக்கியப் பொறுப்பு வகித்த மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆர். சுரேஷ் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுக-வின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் அவர் மீண்டும் கட்சியில் இணைந்தார். […]