தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி 20,508 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், சுமார் 1.85 கோடி பேர் பயணம் செய்கின்றனர். மேலும், இந்த பேருந்துகளுக்கு தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் போடப்படுகிறது. ஆனால் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் செலவு அதிகரித்துள்ளது. தினசரி வருவாய் ரூ.39 கோடியாக உள்ள நிலையில், செலவு […]

வடகொரியாவில் பொதுவாகவே உடுத்தும் உடை முதல் இசை கேட்பது வரை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடைய நாடாக உள்ளது. இதனால், அந்த நாடு எப்போதும் தனித்தே இருக்கிறது. இந்நிலையில், அங்கிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு செல்போன் குறித்த ஆய்வு தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட செல்போன் ஒன்று பிபிசி செய்தி நிறுவனத்திற்கு சென்றுள்ளது. […]

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி வேலை நாட்கள், விடுமுறைகள், […]

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. தற்போதைக்கு தனக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை சந்தித்து பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் கூறியுள்ளார். இந்த சூழலில் தான், மணிப்பூரில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவரின் மகனின் 130 ஆபாச வீடியோக்கள் தொடர்பான […]

தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு […]

2021 சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுப்படி, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு தொடங்கியது. அதன்படி, மாதந்தோறும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 1.14 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக நாளை (ஜூன் 4) மாபெரும் முகாம் தமிழ்நாட்டில் நடக்கிறது. மொத்தம் […]

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் 18-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. ”ஈ சாலா கப் நம்தே” என முழங்கி வரும் ஆர்சிபி, பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், கோப்பையை வென்றதில்லை. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பஞ்சாப் […]

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் […]

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 75 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Officer (Finance), Management Trainee (Boiler), Management Trainee (Marketing), Management […]

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும், வாட்ஸ் அப் செயலி கட்டாயம் இருக்கும். இது நெருங்கிய நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும், காதலியுடனும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில், வாட்ஸ் அப் தனது […]