நமது பயண அனுபவங்களை தீர்மானிப்பதில் ஹோட்டல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கும்போது, அவற்றின் வசதிகள் மற்றும் சேவையின் அடிப்படையில் ஸ்டார் மதிப்பீடுகளை நாம் கவனிக்கிறோம். பொதுவாக, ஹோட்டல்கள் 1 முதல் 5 ஸ்டார் வரை மதிப்பீடுகளை பெறுகின்றன. ஆனால், சில ஆடம்பர ஹோட்டல்கள் அவற்றின் பிரமிக்க வைக்கும் வசதிகளுக்காக 7 ஸ்டார் ஹோட்டல்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இது அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லையென்றாலும், சர்வதேச அளவில் ஒரு சிறப்பு அங்கீகாரமாக […]
முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், அதை சரியாக சமைக்காதபோது பல உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும். முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கரு முழுமையாக வேகும் வரை சமைக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் 71°C (160°F) வெப்பநிலையில் சமைத்தால், பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். ஆனால், முட்டைகளை அதிக நேரம் சமைப்பது ஆபத்தானது. அதிக வெப்பத்தால், மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, ஆக்ஸிஸ்டிரால்கள் என்ற நச்சுப் பொருட்களாக மாறும். […]
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ஒன்று. இத்திட்டம், கோடிக்கணக்கான பெண்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே 1.15 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், விடுபட்ட தகுதியான பெண்களையும் இத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சுமார் […]
நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தத இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ளார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற 2-வது மாநில மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து […]
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார். நீர்ச்சத்து […]
இன்றைய காலகட்டத்தில் செல்போன் நமது டிஜிட்டல் அடையாளமாக மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் முதல் சமூக வலைதளங்கள் வரை அனைத்துக்கும் செல்போன் எண் அவசியமாகிறது. இந்தியாவில் செல்போன் சேவைகள் தொடங்கப்பட்டபோது, பயனர்களை எளிதில் அடையாளம் காணவும், நெட்வொர்க் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவும், நாடு முழுவதும் ஒரே அளவிலான செல்போன் எண்கள் இருக்க வேண்டும் என்று டிராய் மற்றும் தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தன. இதற்காக, 10 இலக்க எண் வடிவம் […]
பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மரணம், மஞ்சள் காமாலை குறித்த விழிப்புணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, அது ஒரு தீவிர நோயின் அறிகுறியே என மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது உடலில் உள்ள பழைய ரத்த சிவப்பணுக்கள் சிதைவடையும்போது, அதிலிருந்து ‘பிலிருபின்’ என்ற கழிவுப் பொருள் உருவாகிறது. இது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள ரத்த […]
தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் துடிப்பான உடல்மொழியால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் ரோபோ சங்கர், தனது 46-வது வயதில் காலமானார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற ரோபோ சங்கர், ஒரு நடிகர், ஸ்டாண்ட்-அப் காமெடியன் மற்றும் நடன கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதில் ரோபோ போல வேடமிட்டு […]
ஒருவரின் வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டால், அதற்கு பித்ரு தோஷம் ஒரு காரணமாக இருக்கலாம். மகாளய பட்ச காலத்தில், அதாவது செப்டம்பர் 21ஆம் தேதிக்குள், ஒரு நாள் மட்டுமாவது எளிய அன்னதானம் செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தை போக்கலாம். இந்த தானத்தை மதியம் 11.30 மணி முதல் 2.00 மணிக்குள் செய்வது மிகவும் சிறந்தது. இந்த தானத்திற்காக, வீட்டில் பச்சரிசியை பயன்படுத்தி தயிர் சாதம் தயார் செய்ய வேண்டும். தயிர் […]
கலியுகத்தின் தெய்வமாகப் போற்றப்படும் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறாதபோது வருத்தம் கொள்வதுண்டு. ஆனால், இதற்கு ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறை இருக்கிறது. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த வழிபாட்டை, முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை அல்லது சஷ்டி திதியில் செய்யலாம். முடிந்தால், தொடர்ந்து 6 வாரங்களுக்கு இந்த வழிபாட்டை செய்வது சிறந்த பலன்களைத் தரும். வழிபாட்டுக்கு தேவையானவை : […]

