காசா நகரை மையமாகக் கொண்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான முகமாகவும், ஆயுத பிரிவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த அபு உபைதா, சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உள்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கருத்து வெளியிட்டுள்ளதுடன், அந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஹமாஸ் தரப்பில் […]

பஞ்சாங்க குறிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவது தான் எமகண்ட காலம். தமிழர் வாழ்வில் சுப முகூர்த்த நேரங்கள் முக்கியம் என்பது போல, தவிர்க்க வேண்டிய நேரங்களும் பெரும் கவனத்துடன் கருதப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது தான் எமகண்டம். பகல்பொழுதின் ஒரு பகுதியான எமகண்டம், மரணத் தெய்வமான எமராஜனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த நேரம் முழுவதும், கேதுவின் தாக்கத்துடனும், எதிர்மறை சக்திகளின் ஆதிக்கத்துடனும் சூழப்பட்டதாக நம்பப்படுகிறது. ராகு காலம் போலவே, தினசரி ஒருமுறை […]

பெரம்பலூர் மாவட்டம் அ.மேட்டூர் பகுதியில் 43 வயதான ராஜா என்பவர், விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் ரேவதி என்பவருடன் முதலாவது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பின்னர் ராஜா, மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திலேயே அவருக்கு மேலும் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்துள்ளனர். இரு […]

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தில் 43 வயதான ரெஜினா என்பவர், பல ஆண்டுகளாக தனது இரு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவரது கணவர் பாண்டி, உடல்நலக்குறைவால் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பை ஏற்று ரெஜினா தனது மகன்களை வளர்த்து வந்தார். இந்நிலையில், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மாசானமுத்து என்பவருடன் ரெஜினாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் மூத்த மகன் கொம்பையா வேலைக்குச் செல்லும் போது, இளைய […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் 18 வயது மாணவியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தபோது, குறிப்பாக அவரது அண்ணன் கடும் கண்டனம் தெரிவித்ததாக […]

சினிமாவில் இருந்து அரசியலில் குதித்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளார். இவர், சமீபத்தில் மதுரையில் நடத்திய மாநாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தேர்தலும் நெருங்கி வருவதால், மக்களை நேரடியாக சந்திக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது மேடைகளில் பிரதமர் மோடி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரடியாகவே தாக்கிப் […]

தொழிற்துறையின் மையமாகத் திகழும் திருப்பூர், பனியன் மற்றும் துணி ஏற்றுமதியின் காரணமாக நாடு முழுவதும் அறியப்படும் நகரமாக வளர்ந்துள்ளது. சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியமர்ந்துள்ள இந்த நகரத்தில், வெளிமாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இங்கு வேலைக்காக குடிபெயர்ந்து வருகின்றனர். இந்த சூழலில் தான், கலைஞர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில பெண்கள் […]

வெளிப்புறத்தில் முள் போலத் தோன்றினாலும், உள்ளே இனிமையும், ஊட்டச்சத்தும் நிரம்பியிருக்கும் பழம் ரம்புட்டான். இந்த பழம் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிற ஆற்றல் தருகிறது. தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை தான் இதன் பூர்விகமாகும். ஆனால், தற்போது தமிழகத்தின் சில பகுதிகளிலும் இது விளைகிறது. பச்சை நிறத்தில் காயாகத் தோன்றி, பழுத்தபோது சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தைப் பெறும் இந்த பழம், சுவையில் இனிப்பும் லேசான புளிப்பும் […]

தொழில்நகரான திருப்பூரில், தொழிலாளர்களின் அணிவகுப்பால் இரவும் கூட பகலாக மாறிவிடுகிறது. ஏராளமான பின்னலாடை மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகளில் உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக திரண்டு வருகின்றனர். இந்நிலையில், நகரத்தின் முக்கிய மையமான திருப்பூர் பேருந்து நிலையத்தில், இரவு நேரங்களில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. பேருந்து நிலையம் அருகே இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் இளைஞர்களிடம், இளம் பெண்களின் செய்யும் செயல் அங்கு […]

பிரபல நிறுவனங்களின் கணினி அமைப்புகள் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்படுவதால், உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து, கூகுள் நிறுவனம் அதன் 2.5 பில்லியன் G-mail பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு phishing (மோசடி மின்னஞ்சல் தாக்குதல்) நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை அனுப்பியது. பயனாளர்களிடம் அவர்களின் லாக்கின் விவரங்களை ஏமாற்றி பெற இந்த மோசடி முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனம் […]