நீளமான, கருமையான, மற்றும் அடர்த்தியான கூந்தல் என்பது பெரும்பாலான பெண்களின் கனவாகவே இருந்து வருகிறது. இயற்கையாக இத்தகைய தலைமுடியை பெற்றவர்கள் சிலரே என்றாலும், சரியான பராமரிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், எந்தவொரு பெண்ணும் தனது கூந்தலின் தரத்தை மேம்படுத்த முடியும். இயற்கை வழிகள் இதற்காக பாதுகாப்பானதும், நீடித்த விளைவுகளைக் கொடுப்பதும் காரணமாக, இப்போது அதனைத் தேடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முடி வளர்ச்சியில் எண்ணெய் முக்கிய பங்கு […]
அரிசி, இந்தியா முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள். நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இது, பெரும்பாலான மாநிலங்களில் தினசரி உணவாகவே பயன்படுத்தப்படுகிறது. ஒரே நாட்டில் வாழ்ந்தாலும், அரிசியை சமைக்கும் முறை வீடு தோறும் மாறுபடும். சிலர் ஒரு பாத்திரத்தில் வேகவைக்கிறார்கள், மற்றவர்கள் பிரஷர் குக்கரை விரும்புகிறார்கள். இம்மாதிரியான மாறுபாடுகள், சமைக்கப்படும் அரிசியின் சுவையும், அதன் ஊட்டச்சத்துகளும் வெவ்வேறு விதமாக இருக்கும். அரிசி என்பது […]
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய மதிப்புமிக்க ஆவணங்கள், நகைகள் போன்றவை பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர் சேவையை நாடுவது வழக்கம். இதனை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கத்தில், ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளையும், புதிய விதிகளையும் கடந்த சில ஆண்டுகளில் எடுத்து வந்துள்ளது. தற்போது, இந்த நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து வங்கி லாக்கர் அறைகளிலும் 24 […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு சாதாரண சுற்றுலா பயணமாக எண்ணிக்கொண்டு செல்லும் போதும், உண்மையான பக்தியுடன் செல்வோர் வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவித்து வருகின்றனர். ‘திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும்’ என்ற பழமொழி வெறும் நம்பிக்கையோ, வரலாற்றுப் பின்னணியற்ற கருத்தோ அல்ல. பலர் அனுபவித்த உண்மைதான் என்று கூறப்படுகிறது. திருப்பதி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது […]
வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது அனைவரது கனவாக இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு பலருக்கு இன்றும் எட்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கான இடமோ, அதற்கான யோகமோ இருக்கிறது. ஆனால் தொடங்கும் முயற்சிகள் தடைகளை சந்திக்கின்றன. மனையின் சட்ட பிரச்சனைகள், வாஸ்து குறைபாடுகள், குடும்ப பாகப்பிரிவுகள் என பல காரணங்களால் தடைபடுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் ஒரு விசேஷமான தலம் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் […]
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் காமா ரெட்டி கூடா பகுதியில் இடம்பெற்ற ஒரு கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சுவாதி என்பவர், மகேந்தர் ரெட்டி என்ற இளைஞருடன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். சமீபத்தில், சுவாதி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தின் உச்சத்தில் சென்ற மகேந்தர் ரெட்டி, தனது கர்ப்பிணியான மனைவியை கத்தியால் […]
டெல்லி மாநிலம் உத்தம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரை 21 வயதான ரஹ்மான் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயிடம் கூறிய நிலையில், அவர் அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் […]
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் 24 வயதான மணிகண்டன். இவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், வேலைக்காக மாயனூருக்கு சென்ற போது அங்கு வசிக்கும் 23 வயது இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மணிகண்டன், தனது கள்ளக்காதலியுடன் வீட்டை விட்டு, வெளியேறியதால் மணிகண்டனின் தந்தை லாலாபேட்டை […]
தபால் துறை, தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அரசாங்க ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டங்கள், குறைந்த ஆபத்துடன் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் வைப்புத் தொகை (RD), மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA), கிசான் விகாஸ் பத்திரம் (KVP) என பல்வேறு […]
வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை தேடி தமிழ்நாட்டை நோக்கி பயணம் செய்வது கடந்த சில ஆண்டுகளில் ஒரு சாதாரணமாகிவிட்டது. பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், கையில் ஒரு பை மட்டும் வைத்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் போன்ற ரயில் நிலையங்களில் இறங்கும் காட்சிகளை அடிக்கடி காண முடிகிறது. வடமாநில தொழிலாளர்கள் கட்டிட பணிகளைத் தாண்டி, ஹோட்டல், அலுவலகப் பணி, குளிர்பதன நிலையம், […]

