பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் திரைப்படம் மதராஸி, செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், விக்ராந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தை ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தான், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. […]

முதல் முறையாக கடன் பெற விண்ணப்பிக்கும் நபர்கள், சிபில் மதிப்பெண் (CIBIL Score) இல்லாததால் மட்டுமே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக்கூடாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மக்களவையில் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதரி, “முன்னர் எந்த வகையான கடனும் எடுத்திருக்காத, க்ரெடிட் வரலாறு இல்லாத நபர்களின் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் […]

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தில் இருந்து வந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தகுதியும், நிதிசார்ந்த ஆதரவும் வழங்கும் வகையில், மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026 கல்வியாண்டுக்கான புதியதும் புதுப்பித்தலும் செய்ய வேண்டிய கல்வி உதவித்தொகை (scholarship) திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), மேலாண்மை கழகங்கள் […]

விநாயகர் சதுர்த்தி என்பது பக்தி பூர்வமாகவும், ஆன்மீக ரீதியாகவும் தமிழர்கள் மத்தியில் மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வருகிற இந்த தினத்தில், வீடுகளில் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள், நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன. அந்த நைவேத்தியங்களில் முதன்மையானது கொழுக்கட்டை மற்றும் மோதகம். ஒரு காலத்தில், ஞானபாலி எனும் மன்னன், விநாயகரின் பக்தராக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தினசரி பூஜைகள், தியானங்கள் மூலம் விநாயகரை வழிபட்டு வந்தார். ஆனால், அவரது நாட்டில் […]

ஜோதிட நம்பிக்கைகள் என்பது தமிழர்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தை வைத்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் செய்யப்படும் பரிகாரங்கள் இன்று பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. தோஷங்களை சீர்செய்யவும், நல்ல பயன்களை அதிகரிக்கவும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவை, சீரமைக்கும் ஆன்மீக வழிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த பரிகார முறைகள் பெரும்பாலும் நம்பிக்கையையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது. புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் […]

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் முன்னாள் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பின் கொலை செய்த மனைவிக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்தியாஸ் என்பவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதேசமயம், கலபுரகியில் பணியாற்றும் போது லட்சுமி என்ற ஆசிரியையை காதலித்து வந்தார். பின்னர், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து […]

கள்ளக்காதல் தொடர்பான சண்டையில் வாட்ச்மேன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் பொட்டுக்காடு மேல தெருவை சேர்ந்த சந்திரன் (வயது 55), ராமேஸ்வரம் – கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெள்ளப்பட்டி அருகே பாலம் கட்டும் பணியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இவர், பணிபுரிந்த குடோனில், மர்ம நபர் ஒருவர் கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தருவைகுளம் காவல் நிலைய போலீசார், […]

சென்னையில் 15 வயது பள்ளி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சினிமா துணை நடிகை உட்பட 3 பேரை போலீசர் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள 100 அடி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசர், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 9ஆம் வகுப்பில் பயிலும் […]

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பிக்கைக்குரிய நாயகராக இருந்த சேதேஷ்வர் புஜாரா, இன்று (ஆகஸ்ட் 25) அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த புஜாரா, கடந்த சில காலமாக அணியில் இடம் பெறவில்லை. பிசிசிஐ புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை முன்னிலைப்படுத்தி, புஜாராவை அணிக்கு தேர்வு செய்யவில்லை. 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் […]

சிறுநீரக கற்கள் ஏற்படுவது என்பது தனிமனிதரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் ஒரு சுகாதார சிக்கலாகும். சிறுநீரில் கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உணவுப் பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போதிய அளவில் தண்ணீர் அருந்துவது, உடலில் சுரக்கும் கழிவுகளைச் சீராக வெளியேற்றும் முக்கிய வழியாக இருக்கும். ஆனால், இத்துடன் சில உணவுகளை தவிர்த்தும், சிலவற்றை நியமித்து உபயோகித்தும் சிறுநீரகங்களை பாதுகாக்க முடியும். உணவுகளில் சேர்க்க வேண்டியவை : […]