தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு […]

2021 சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுப்படி, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு தொடங்கியது. அதன்படி, மாதந்தோறும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 1.14 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக நாளை (ஜூன் 4) மாபெரும் முகாம் தமிழ்நாட்டில் நடக்கிறது. மொத்தம் […]

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் 18-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. ”ஈ சாலா கப் நம்தே” என முழங்கி வரும் ஆர்சிபி, பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், கோப்பையை வென்றதில்லை. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பஞ்சாப் […]

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் […]

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 75 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Officer (Finance), Management Trainee (Boiler), Management Trainee (Marketing), Management […]

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும், வாட்ஸ் அப் செயலி கட்டாயம் இருக்கும். இது நெருங்கிய நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும், காதலியுடனும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில், வாட்ஸ் அப் தனது […]

உலகிலேயே மிகவும் சிறிய நாடான ”துவாலு” பற்றியும், அங்குள்ள வாழ்க்கை முறை பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். துவாலு என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு குட்டித் தீவாகும். மேற்கு – மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடான துவாலு, சுமார் 420 மைல்கள் (676 கிமீ) தொலைவில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கே ஒரு சங்கிலியில் சிதறிக்கிடக்கும் ஒன்பது சிறிய பவளத் தீவுகளால் ஆனது. உலகிலேயே மிகவும் சிறிய […]

சமீபகாலமாக பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக, காளான் இருக்கிறது. அவை சூரிய ஒளியில் இருந்து ஆற்றலைப் பெற்று, அதை மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) ஆக மாற்றி வளர்கின்றன. பொதுவாக காளான்கள் தாங்கள் வளர்வதற்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை மற்ற தாவரங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும். இதனால், காளான்களை பூஞ்சை குடும்பத் தாவரமாக அடையாளப்படுத்துகின்றனர். காளான்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில், முதல் வகை, ‘சப்ரோபைட்டுகள்’ எனப்படும் பூஞ்சை காளான்கள் ஆகும். இவை இலைகள், […]

தொழில் பார்ட்னர் சூனியம் வைத்திருப்பதாக கூறி 76 கிராம் தங்கம் நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளி ஸ்ரீ வேங்கடட்ம டிரஸ்ட் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் (56). தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். சில நாட்களாக தொழில் சரியாக கைகொடுக்கவில்லை என தனது நண்பரிடம் கூறி வந்துள்ளார். அப்போது அவர், பெரம்பூர் பெரியார் நகரில் […]

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அருகே மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவாஹிர் என்பவரது மகன் முகமது ஷாம் (வயது 31). இவர், பட்டபடிப்புக்காக கடந்தாண்டு சென்னை சென்றார். அப்போது, அமைந்தக்கரை ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவரின் மகள் ரிஸ்வானா (21) என்பவருடன் முகமது ஷாமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர், இருவரும் காதலித்து வதனர். காதலித்தபோது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். […]