திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு மாமூல் கேட்டு அடாவடி செய்த விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (வயது 45), திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலராக உள்ளார். இவர், கடம்பத்துார் ஒன்றியத்தில் இயங்கி வரும் ‘கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி’ என்ற துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் […]
சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சீமாத்தம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழா ஆடி மாதம் தொடங்கி, தற்போதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலுக்கு சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி […]
இன்றைய இணையம் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஒன்றாக ஆன்லைன் ஷாப்பிங் இருக்கிறது. அன்றாட தேவைகள் முதல் ஆடம்பர விருப்பங்கள் வரை என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே வாங்க முடியும். ஆனால், இந்த வசதிக்குள் சில ஆபத்துகள் மற்றும் ஆரோக்கிய நலன்களும் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் கடைக்குச் சென்று வாங்குவது என்பது ஒரு இயல்பாக இருந்தது. இன்று அந்த நிலை மாறி, […]
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வளர்ச்சி பெறும் போது அதை பாராட்டும் மனதுக்கு பதிலாக பொறாமை, எதிர்மறை எண்ணங்கள் பெருகும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, பலருக்கு கண் திருஷ்டி அல்லது தீய சக்தி தாக்கம் ஏற்படுகிறது. அறிவியல் அதனை ஏற்கக்கூடாது என்றாலும், பாரம்பரிய அறிவும் வாழ்க்கைப் பார்வையும் கண் திருஷ்டி உண்மை என பலரையும் நம்ப வைக்கிறது. இதன் தாக்கமாக குழந்தைகள் தூக்கமின்றி அழுவது, நோய்வாய்ப்படுவது, குடும்பத்தில் இடையூறுகள், திடீர் […]
ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியமான ஒன்று. தினசரி தொழில் வாழ்க்கையின் சுழற்சி, குடும்ப பொறுப்புகள், எதிர்பாராத தடைகளை நிவர்த்தி செய்ய குலதெய்வ வழிபாடு கட்டாயம் இருக்க வேண்டும். தினமும் வீட்டில் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், வாரத்துக்கு ஒருமுறையாவது குலதெய்வத்தின் நாமத்தை உச்சரித்து விரதம் இருந்து பிரார்த்திப்பது, குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமையன்று, வீட்டை […]
மும்பையைச் சேர்ந்தவர் ஒப்பனை கலைஞர் பரத் அஹிரே. இவருக்கு 40 வயது ஆகும் நிலையில், கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அவர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜூலை 12ஆம் தேதி பரத் அஹிரே, தனது மனைவி ராஜஸ்ரீ முன்னிலையில், சந்திரசேகர் பத்யாச்சி, ரங்கா […]
சினிமா என்பது கவர்ச்சிகரமான வெகுஜன ஊடகம் என்றாலும், வெளியில் தெரியாத பல இருண்ட பக்கங்களும் உண்டு. சில நடிகர், நடிகைகள் உச்சத்தில் இருந்தாலும் திடீரென சரிந்து விடுகின்றன. அந்த வகையில், சினிமா உலகில் சரிந்த ஒரு நடிகையின் வாழ்க்கை பயணம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். அந்த நடிகையின் பெயர் சுசித்ரா சென். இவர், இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி, […]
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கள்ளியூரை சேர்ந்தவர் சுனில். இவருக்கு 42 வயதாகும் நிலையில், தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பின்சி (36). இவர், பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக துணை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை குழந்தை இல்லை. இதற்கிடையே, கணவர் சுனில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். […]
மனித உடல் என்பது, சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்து இயங்குகிறது. நாம் உண்ணும் உணவிலிருந்து, குடிக்கும் நீரிலிருந்து, சுவாசிக்கும் காற்றில் இருந்து, சூரிய வெளிச்சத்திலிருந்து, என அன்றாட சூழ்நிலையின் அனைத்து அம்சங்களும் நம் உடலை நேரடியாகத் தாக்குகின்றன. இவ்வாறு, இயற்கையோடு நெருங்கிய ஒத்துழைப்பிலேயே மனித வாழ்க்கை தாங்கி நிற்கிறது. ஆகவே, நாம் உண்பது சுத்தமான உணவாக இருக்க வேண்டும். நாம் குடிப்பது நல்ல நீராக இருக்க வேண்டும். நாம் சுவாசிப்பது தூய காற்றாக […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லி ராஜு. இவருக்கு 27 வயது ஆகிறது. இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மௌனிகா (25) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில், மௌனிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த குண்டு உதயகுமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஆரம்பத்தில் நட்பாக […]

