சமீப காலமாக தெரு நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அதிலும், கடந்த சில வாரங்களாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நாய் போன்ற விலங்குகள் மனிதனை கடிக்கும் போது, ரேபிஸ் (Rabies) எனப்படும் ஆபத்தான வைரஸ் ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது. இது சிகிச்சை இன்றி விட்டுவிட்டால், மரணத்துக்கு கூட வழிவகுக்கக்கூடும் என்று […]
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த “அமைதியை நோக்கி” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து […]
பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நிலஅதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள நாடு ஜப்பான். இந்த பகுதியில் பசிபிக் தட்டம், பிலிப்பைன் கடல் தட்டம், யூரேஷிய தட்டம் மற்றும் வட அமெரிக்க தட்டம் உள்ளிட்ட பல புவிச்சரிவு தட்டுகள் சந்திக்கின்றன. இந்த புவிச்சரிவு தட்டுகள் தொடர்ந்து நகர்வதும், ஒன்றோடு ஒன்றும் மோதுவதால், ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது இயற்கையின் ஒரு வழக்கமான செயல்பாடாக இருந்தாலும், ஜப்பானில் வாழும் மக்களுக்கு […]
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான பதவி வகித்து வருபவர் ஐ.பெரியசாமி. இவரின், திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு, எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது. அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திமுகவில் மாவட்ட செயலாளராகவும், பழனி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். […]
அம்மன் வழிபாட்டிற்கே உரிய மாதமான ஆடி மாதம் முடிந்துவிட்டது. முழுமுதற் கடவுளாகிய விநாயகரையும், காக்கும் கடவுளான திருமாலையும், உலகிற்கே தந்தையாக விளங்கும் சிவனையும், வழிபடுவதற்கான ஆவணி மாதம் இன்று தொடங்கியுள்ளது. ஆவணி மாதம் தான் விநாயகரும், கிருஷ்ணரும் அவதரித்த மாதம் ஆகும். சூரியன் சிம்ம ராசியில் நிலைபெற்று வலிமை பெறும் இந்த காலக்கட்டத்தில், தொடங்கப்படும் எந்த காரியமும் சிறப்பாக முடியும் என்ற நம்பிக்கை. இதுவே, ஆவணிக்கு “சிங்க மாதம்” என்ற […]
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதீஸ்வரி (30 வயது) என்ற இளம்பெண், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், என்ஜினீயரான யோதீஸ்வரனுக்கும் (34 வயது) கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. யோதீஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு யோதீஸ்வரனும் ஜோதீஸ்வரியும் மூன்று மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு […]
முந்தைய காலத்தில் “மாரடைப்பு” என்பது வயதானவர்களின் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அது முற்றிலுமாக மாறிவிட்டன. இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகளும், சில நேரங்களில் மரணமும் கூட நிகழ்வது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களே உணவுப் பழக்க வழக்கங்கள் தான். நம் முன்னோர்கள் இயற்கையின் வளத்துடன் வலிமையாக இருந்தார்கள். சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நாட்டு உணவுகள் என அவர்களின் வாழ்க்கை முறையே ஒரு மருத்துவமாக […]
இன்றைய காலட்டத்தில் பெரும்பாலானவர்கள் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக வயது என்ற வரம்பே இல்லாமல், இளம் தலைமுறையினர் அதிக மருத்துவ பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்களில் முக்கியமானதாக, பித்தப்பை கல் (Gallstones) பிரச்சனை இருக்கிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பித்தப்பை கல் தொடர்பான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணமே நம் உணவுக் […]
“என்ன செய்யுறதுனே தெரியல.. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க” என்ற வார்த்தைகளை நம்மில் பலரும் ஒருமுறையேனும் கேட்டிருப்போம் அல்லது நாமே சொல்லியிருப்போம். வேலைகள் பறிபோகும், உடல்நிலை சரியில்லாமல் போகும், குடும்பத்தில் சண்டைகள் வெடிக்கும், உறவுகளில் விரிசல் ஏற்படும், தேவையில்லாத பயம், தூக்கமின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால், “யாரோ செய்வினை வெச்சிருக்காங்க” என்று தான் நினைக்க தோன்றும். மற்றவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்பதற்காக பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. […]
தெய்வங்களில் மிகவும் வலிமையானது குலதெய்வம். இது தலைமுறை தலைமுறையாக வழிபடும் தெய்வத்தைக் குறிக்கிறது. இந்த வழிபாடு, ஒருவரின் வாழ்நாளில் முக்கியமான கடமைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் மறைந்து கொண்டே போகிறது. குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் மூதாதையர்கள் வழியாகப் பரம்பரை வழியில் வழிபடும் தெய்வம் ஆகும். இது சில குடும்பங்களில் முருகன், அம்மன், விநாயகர் போன்ற தெய்வங்களாக இருக்கலாம். சிலருக்கோ கிராம […]

