பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு, நாடகமாடிய கணவனைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெகுசராய் மாவட்டத்தின் ரகுநந்தன்பூர் கிராமத்தை சேர்ந்த சந்தன் குமார் சவுத்ரி என்பவரே இந்தச் செயலில் ஈடுபட்டுச் சிக்கியுள்ளார். சந்தன் குமார் தனது மனைவி சுமன் குமாரி மற்றும் கைக்குழந்தையுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். விசேஷம் முடிந்து திரும்பும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத […]
சாப்பிட்ட உடனேயே கையோடு சூடாக ஒரு கப் டீ குடிப்பது பலருக்கும் விருப்பமான பழக்கமாக இருக்கலாம். செரிமானத்திற்கு இது உதவும் என்று பலரும் நம்பினாலும், உண்மையில் இந்தப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மெல்லக் கொல்லும் விஷமாக அமையக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தேநீரில் உள்ள வேதிப்பொருட்கள் நமது செரிமான மண்டலத்திலும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாகக் காண்போம். தேநீரில் இயற்கையாகவே அமைந்துள்ள ‘காஃபின்’ மற்றும் ‘டானின்கள்’, […]
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கல்லூரிப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். ஆற்காட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் இன்று காலை கல்வி நிறுவனத்தை நோக்கிப் புறப்பட்டது. பேருந்து பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியை நெருங்கியபோது, எதிரே வந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின்னல் வேகத்தில் […]
உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. சுமார் 4.187 டிரில்லியன் டாலர் மதிப்புடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்தியா தற்போது உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவின் பொருளாதார இன்ஜின் எது..? இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் […]
இன்றைய காலகட்டத்தில் பெண்களின் சுதந்திரமான பயணங்களுக்கு இருசக்கர வாகனங்கள், குறிப்பாக ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்குகின்றன. தினசரி அலுவலகப் பயணம், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது அல்லது நகருக்குள் சிறிய பயணங்களை மேற்கொள்வது எனப் பெண்களின் தேவைகள் பலதரப்பட்டவை. இவற்றைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில், ஓட்டுவதற்கு எளிதான, எடை குறைந்த மற்றும் இருக்கை உயரம் குறைவாக உள்ள 5 சிறந்த ஸ்கூட்டர்கள் குறித்து இங்கே காணலாம். பெண்களுக்கான டாப் […]
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில், அந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ‘கூகுள் பிக்சல் 9a’ (Google Pixel 9a), தற்போது யாரும் எதிர்பாராத வகையில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. குடியரசு தின சிறப்பு விற்பனை முடிவடைந்த பின்னரும், பிரபல ஆன்லைன் வர்த்தகத் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இந்த அதிரடிச் சலுகையைத் நீட்டித்துள்ளது வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]
நமது அன்றாட வாழ்வில் மிகச்சிறிய அங்கமாகத் திகழும் ‘சேஃப்டி பின்’ (Safety Pin), உடை கிழிந்தால் ஒட்டுப்போடுவது முதல் சேலை அலங்காரம் வரை பல்வேறு இக்கட்டான சூழல்களில் நமக்குக் கைகொடுக்கிறது. பல தலைமுறைகளாக புழக்கத்தில் இருக்கும் இந்தச் சிறிய ஊசியின் அடிப்பகுதியில் ஒரு வட்ட வடிவத் துளை இருப்பதை நாம் கவனித்திருப்போம். ஏதோ அலங்காரத்திற்காகவோ அல்லது நூலை கோர்ப்பதற்காகவோ அந்த ஓட்டை வைக்கப்பட்டிருப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், […]
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், கள்ளக்காதலியை தனது மனைவியுடன் சேர்ந்து காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பணியாற்றி வந்த விஜய் குமார் சாஹ்னி என்பவருக்கும், பிரியா ஷெட்டி (35) என்பவருக்கும் இடையே கடந்த 2012-ம் ஆண்டு முதல் ‘லிவ்-இன்’ முறையில் உறவு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும் உள்ளான். விஜய் குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து, கடந்த 2014-ம் […]
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றத்தை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியை அகற்றி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதே தனது வாழ்நாள் லட்சியம் என அவர் சூளுரைத்துள்ளார். தனது 39 ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தையும், அனுபவத்தையும் சுட்டிக்காட்டிய சசிகலா, இன்றைய அரசியல் சூழலில் தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த […]
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், 2026-ஆம் ஆண்டு பிறப்பிலேயே ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் (AICPI) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி (DA) 5 சதவீதம் வரை உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 58 சதவீத […]

