நாடு முழுவதும் காலியாக உள்ள 22,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், தற்போது நிலை 1-ன் கீழ் (Level 1) மொத்தம் 22,195 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,036 பணியிடங்கள் […]

நாகை மாவட்ட திமுகவில் நீண்டகாலமாக சிறுபான்மையினரின் குரலாக ஒலித்து வந்த முக்கியத் தலைவர் ஜி.எஸ்.பி. அலிசாஹிப், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அலிசாஹிப், நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாகூர் ஹனிபாவுடன் சிறை சென்றுள்ளார். […]

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐய்யர் மலையிலிருந்து குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் உருக்குலைந்து பலத்த சேதமடைந்தன. பேருந்திற்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கித் […]

அதிமுக அரசியலில் அதிகாரப் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. அதிமுகவின் கதவுகள் தனக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதையும், எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதையும் உணர்ந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, தற்போது மாற்றுப் பாதைகளை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், ஓபிஎஸ்-ஸின் நிழலாக வலம் வந்த அவரது தீவிர ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் விடுத்துள்ள ஒரு […]

இந்தியர்களின் சமையலறையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் உப்பு, தற்போது பலருக்கு ஆயுட்கால நோய்களை பரிசாக அளித்து வரும் ஒரு நிசப்த கொலையாளியாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) எச்சரிக்கைப்படி, ஒரு ஆரோக்கியமான மனிதன் நாளொன்றுக்கு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி) உப்பை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியர்களின் சராசரி உப்பு நுகர்வு 8 முதல் 11 கிராமாக இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த […]

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லேட்டா பகுதியில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன 19 வயது இளம் பெண்ணை தேடி வந்த போலீஸார், ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவரை மீட்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணின் தாயார் நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட […]

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் ஒரு பிஞ்சு குழந்தை மற்றும் தாயையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் நகேஷின் மனைவி மமதாவிற்கு (25) தெரியவந்ததை அடுத்து, குடும்பத்தில் பெரும் புயல் வீசியுள்ளது. […]

உலகளவில் புற்றுநோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் நவீன வாழ்வியல் முறைகளே இந்த அபாயத்திற்கு முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ’கூல் லிப்’ (Cool Lip) போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கல்பனா மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சிகரெட்டில் உள்ள அதே நிக்கோட்டின் இதிலும் கலந்திருப்பதால், இது நேரடியாக ரத்த […]

புதுச்சேரி அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கிச் சூடுபிடித்துள்ள நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக தனது அதிரடி வியூகத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின்’ தலைவரான செந்தில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, செந்திலை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார். திமுக – காங்கிரஸ் கூட்டணி […]

வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் மற்ற பூச்சிகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த, நாம் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு பொருள் ‘நாப்தலின்’ உருண்டைகள் (Naphthalene Balls). துணிகள் வைக்கும் பீரோக்கள் முதல் கட்டிலின் இடுக்குகள் வரை ஆங்காங்கே போடப்படும் இந்த சிறிய வெள்ளை நிற உருண்டைகள், உண்மையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் என்பதைப் பலரும் உணருவதில்லை. குறிப்பாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ‘ரசூண்டைகள்’ பயன்படுத்துவது பெரும் […]