ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, […]
2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்புகளுக்காக நீட் பிஜி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான நீட் பிஜி தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்த தேர்வுகள் 2 ஷிப்ட்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டன. ஆனால், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், NEET-PG தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த […]
கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மேலும் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாகவுள்ள பகுதிகளை குறிவைத்து, அங்கிருக்கும் நிர்வாகிகளை ராமதாஸ் மாற்றி வந்ததாக கூறப்பட்டது. […]
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,300-ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு முதியவர், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுவாச பிரச்சனை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படும் இணைநோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு கொரோனா […]
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும், இந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் […]
பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பைக்காக ஏங்கிய பெங்களூரு அணிக்கு இந்தாண்டு தான் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இறுதி யுத்தத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி கோப்பையை வென்றது இதுவே முதல்முறை. இதை கொண்டாடும் […]
தக் லைஃப் திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் மற்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே வெளியாகியுள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அதன் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்துக்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள “சுகர் […]
இறக்குமதி வரியை 10% குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், சமையல் எண்ணெய் விலை அதிரடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் எண்ணெய் விலையைக் குறைக்கும் வகையில், கச்சா எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு 10% குறைக்கவுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில், பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மிகவும் மலிவு விலையில் […]
இல்லத்தரசிகளே.. உங்கள் வீட்டில் நீண்ட காலமாகவே பயன்படுத்தி வரும் மிக்சி மங்கலாகவும், அழுக்காகவும் இருக்கிறதா..? இனி கவலை வேண்டாம். எத்தனை வருட மிக்சியாக இருந்தாலும், அதை புத்தம் புதுசாக மாற்றலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் : * ஒரு பாத்திரம் * ஒரு கிளாஸ் தண்ணீர் * பழைய நியூஸ் பேப்பர் * பல் துலக்கும் டூத்பேஸ்ட் * சுத்தமான துணி * […]
ஒற்றை தலைவலி என்பது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைவதால், ஏற்படும் கடுமையான வலி ஆகும். மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி, சில மணி நேரம் முதல் 2, 3 நாட்கள் வரை கூட நீடிக்கலாம். இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், கடுமையான வெப்பம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளது. கடுமையான தலைவலி இருக்கும்போது, பின்புற மண்டை, கழுத்து ஆகியவற்றில் வலி உண்டாகும். தலைவலி அதிகம் இருந்தால் வாந்தி, குமட்டல் போன்ற […]