திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 32 வயது பெண்மணி ஒருவர், தனது கணவரின் மறைவுக்கு பிறகு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கித் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துணையாக ஒருவரைத் தேடும் நோக்கில், அவரது சகோதரி மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர், அந்தப் பெண்ணிடம் தான் இன்னும் திருமணமாகாதவர் என்றும், உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறி நெருக்கமாகப் […]

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்த குகன் என்பவர், சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் பயின்றபோது, தனது ஜூனியர் மாணவியைக் காதலித்துள்ளார். “நீ இல்லையென்றால் செத்துவிடுவேன்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோரான கண்ணன் – செல்வகுமாரி தம்பதியினர், குகனின் பெற்றோருக்குத் தெரியாமலேயே ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர். சாந்தி முகூர்த்தம் உள்ளிட்ட சடங்குகள் […]

இந்தோனேசியாவில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று பயங்கர விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாவா தீவில் உள்ள சுங்க சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபாத்தில், மேலும் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க யோக்யகர்த்தா நகரை நோக்கி சுமார் 34 பயணிகளுடன் ஒரு பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. ஜாவா தீவின் […]

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தற்போது அதிரடி விளக்கமளித்துள்ளது. முட்டைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்தியின் பின்னணி என்ன..? சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணியான ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) என்ற […]

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான மோதல் போக்கு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. […]

இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமே இருக்காமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (UYEGP) வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள இளைஞர்கள் தங்கள் தொழில் கனவை நனவாக்கப் பெரும் நிதியுதவியையும், அரசு மானியத்தையும் பெற முடியும். UYEGP திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புதிய தொழிலை தொடங்க அதிகபட்சமாக 15 லட்சம் […]

தங்கத்தின் விலை உயர்வு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே எட்டாக்கனியாக மாறி வரும் நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டிலும் இந்த விலையேற்ற புயல் ஓயாது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில், நடுத்தரக் குடும்பங்கள் நகை வாங்க முடியாமல் திணறி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரங்கள் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை என்றே தோன்றுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 10 கிராம் […]

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். குறிப்பாக, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிமுக நோக்கி ஈர்க்கும் படலத்தில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் […]

வானிலை மாறும்போது நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமும், செரிமான அமைப்பும் சில மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. குறிப்பாகக் குளிர்காலத்தில் இதமான தட்பவெப்பநிலை நிலவினாலும், சளி, இருமல், சைனஸ் மற்றும் தொண்டை வலி போன்ற உபாதைகள் நம்மை எளிதில் தொற்றிக்கொள்கின்றன. நாம் அன்றாடம் விரும்பிச் சாப்பிடும் சில உணவுகளே இந்தக் குளிர்காலத்தில் விஷமாக மாறக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர்கால ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்துக் கூடுதல் […]

வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதன் உச்சகட்டமாக, லக்ஷ்மிபூர் பகுதியில் வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) உள்ளூர் நிர்வாகி ஒருவரின் வீடு நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதலில் 7 வயது சிறுமி ஒருவர் உடல் கருகி பலியான நிலையில், […]