கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அடுத்த விசலூர் சாலைப் பகுதியில், கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் அலறியபடி ஓடிவந்தது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளானவர் துர்க்காதேவி என்பதும், அவரை ஆசாரி வேலைக்கு பயன்படுத்தும் உளியால் குத்திக் கொல்ல முயன்றது அவரது கணவர் மாதவன் என்பதும் […]
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா (BOI), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 514 கடன் அதிகாரிகள் (Credit Officers) பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி மற்றும் ஊதியம் : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு […]
அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கும், கலைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பாக வெளிநாடுகளில் கலை ஆசிரியராகப் பணிபுரியவும், திருவாரூர் மாவட்ட மகளிர் மையத்தில் கணினி உதவியாளராகப் பணிபுரியவும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அயலகத் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியையும், கலைகளையும் வளர்க்கும் நோக்கில், மியான்மர், இந்தோனேசியா, மாலத்தீவு, மொரிஷீயஸ் உள்ளிட்ட பல நாடுகளில் […]
கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ் கருதப்படுகிறது. அதன் 8 கைகள் மற்றும் உருமாறும் திறனைத் தாண்டி, அதன் உடலில் ஒளிந்திருக்கும் இதயங்களின் ரகசியம் வியப்பிற்குரியது. ஒரு மனிதனுக்கு இதயம் இருப்பது போலன்றி, ஆக்டோபஸ்களுக்கு 3 இதயங்கள் உள்ளன. கடலின் ஆழமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்க நேரிடுவதால், அங்கிருக்கும் குறைந்தபட்ச ஆக்சிஜனையும் உடல் முழுவதும் கடத்துவதற்கு இந்த 3 இதயங்கள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன. […]
இன்றைய அவசர உலகில், உடல் எடையை குறைப்பது என்பது ஒரு வர்த்தகமாகவே மாறிவிட்டது. “7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைக்கலாம்.. பத்தியம் இல்லாமல் எடையை குறைக்கலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. டீடாக்ஸ் டீ (Detox tea), அதீத பட்டினி, கடினமான உடற்பயிற்சி சவால்கள் எனப் பலரும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர். ஆனால், இப்படி வேகமாக எடையை குறைக்கும் பலருக்கும், மீண்டும் அதே எடை மிக […]
கடந்த 2020-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை யாராலும் மறக்க முடியாது. அந்த வடுக்கள் மறைவதற்குள், ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) எனப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், மனிதர்களிடையே அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, எதிர்காலப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் மிகப்பெரிய கூட்டணி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் இப்போதே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைவதற்குப் பாமக தலைவர் […]
2025-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஆண்டின் வலிகளை மறந்து, புதிய நம்பிக்கைகளுடன் 2026-ஆம் ஆண்டை வரவேற்க அனைவரையும் தயாராகி வருகிறோம். சூரியனின் ஆதிக்கத்தில், அவரது நட்சத்திரமான கார்த்திகையில் பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு புதிய ஒளியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடக ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படி அமையப் போகிறது? இழந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைக்குமா? நிதி நிலைமை […]
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலில், உடல் ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்ள நடைப்பயிற்சி ஒன்றே எளிய மற்றும் மிகச்சிறந்த வழியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், நடைப்பயிற்சி என்று வந்துவிட்டாலே பலருக்கும் எழும் முதல் கேள்வி, “எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?” என்பதுதான். “குறைந்தது ஒரு மணி நேரமாவது வியர்க்க விறுவிறுக்க நடந்தால்தான் பலன் கிடைக்கும்; இல்லையென்றால் நடப்பதே வீண்” என்று சொல்லும் அரைகுறை அறிஞர்களின் பேச்சைக் கேட்டு, நேரம் இல்லாத பலரும் […]
கல்லூரி காதலை தவறாகப் பயன்படுத்தி, இளம்பெண் ஒருவரை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் சம்பவம் கர்நாடக மாநிலம் மகதி நகரில் அரங்கேறியுள்ளது. மகதி நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தான் பயிலும் அதே கல்லூரியில் படிக்கும் விகாஸ் என்ற மாணவனைக் காதலித்து வந்துள்ளார். தனது காதலன் மீது கொண்ட நம்பிக்கையினால், அவர் அழைத்த இடங்களுக்கெல்லாம் அந்தப் பெண் சென்று வந்துள்ளார். ஒருநாள் விகாஸ் தனது […]

