நாமக்கல்லில் இன்று நடைபெற்ற குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் ஆட்சியர் முன்னிலையில் இருத்தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாமக்கல் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்ப்பட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் “மேனகா” என்ற பெயரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியை 3.75 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், கொண்டமநாயக்கன்ப்பட்டி ஊராட்சியில் […]
வரிபாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “மதுரை மண்டலத்தில் வருமானவரித்துறை வசூல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில் 2ஆயிரத்தி 100கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது, அடுத்துவரும் நிதியாண்டுகளில் கூடுதலாக வரிவசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் […]
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக சட்டசபை கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுப்புறங்கள் மற்றும் தங்களுடைய வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடையை […]
தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த விஜே பார்வதி, குறுகிய காலத்திலையே நிறைய ரசிகர்களின் கவனித்தை ஈர்த்தார். பிறகு ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேர்த்துக்கொண்டு சிறிது நாட்கள் இருந்தாலும் கன்டென்ட்களுக்கு பஞ்சமில்லாமல் கொடுத்து மக்களின் ஆதரவை பெற்றார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாகவும் ஒரு […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழா நாளான இன்று(jan-05) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர், பிட்சாடனராக திருவீதி உலா செல்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர்கள் இழுக்கப் படுகின்றன. மாலையில் […]
சென்னை நந்தம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சாலையை, 2009ம் ஆண்டு முதல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, பட்டாபிராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வருவாய் துறை ஆவணங்களில் பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் அங்கு உள்ள மக்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட […]
பாமகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பொதுவாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மதுரை, தூத்துக்குடி தொகுதிகள் வளர்ச்சி பெற்றால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் இதை மத்திய மாநில அரசுகள் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை. நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும், படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் திருவிழா இன்று நடைபெறுகிறது. ஹெத்தையம்மன் படுகர் இன மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி,ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா ஆகிய 8 […]
தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது, 5வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இதை தவற விட வேண்டாம். ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் […]
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஓடத்துறை தெருவில் பிரபல ஸ்வீட் ஸ்டால் ஒன்று உள்ளது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி இந்த கடையில் பல விதமான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட்டு கண்ணாடி ஷோக்கேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பிரபலமான இந்த ஸ்வீட் கடையில் திருவையாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் அதிகமாக கூடுவது வழக்கம், தற்போது பண்டிகை காலம் என்பதால் வியாபாரம் களைகட்டி வருகிறது. அப்போது கண்ணாடி ஷோகேசுக்குள் […]