fbpx

தமிழில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 13 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் …

பாலிவுட் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகராக இருந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. வித்தியாசமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. இவர் நடித்த இந்தியாஸ் மோஸ்ட், பிளாக் பிரைடே, ராஜ்மா சாவால், அசோகா உள்ளிட்ட திரைப்படங்கள் பரிபாலமானவை, மேலும் “மிர்சபூர்” என்ற வெப் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக …

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி முதல் SBI கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகைக்கான பேமெண்ட் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது,

ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி …

தமிழக அரசு பொதுத்துறை பணியாளர்களுக்கு அறிவிக்கப்ட்டுள்ள 10% போனசை குறைந்தது 20% ஆக உயர்த்தி வழங்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை …

வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இடம்பிடித்திருந்த பும்ரா, காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து விலகினார். கடந்த வாரம் 14 வீரர்களுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி.

கடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய …

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் டாஸ்மாக் வசூலை மிஞ்சும் அளவுக்கு ஒரே நாளில் லஞ்சமாக வாங்கிய பணம் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

வட்டாட்சியர் …

மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை, ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 44 இடங்களில் …

தமிழக அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், …

மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யா இறந்த செய்தி …

தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை காலங்களில் மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, ஆண்டுதோறும் …