பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.. குழந்தைகளின் பாதுகாப்பை புறக்கணிக்கக் கூடாது.. முதல்வருக்கு ஏன் இதை செய்ய மனம் வரவில்லை? அண்ணாமலை சாடல்!

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த 5 ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அதிகாலை என்பதால், குழந்தைகள் யாரும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும், 7,441 அங்கன்வாடி மையங்கள், தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட, தமிழக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. தனியார் கட்டிடங்களில் இது போல விபத்துகள் நேரிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஊர் ஊராகச் சென்று, தனது தந்தையின் சிலையை வைக்கத் தெரிந்த முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு, நமது குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட ஏன் மனம் வரவில்லை?

வீண் விளம்பரங்களுக்காகச் செலவிடவா மக்கள் வரிப்பணம்? தமிழகம் முழுவதும், பள்ளிகளுக்கு முறையான கட்டிடங்கள் இல்லை. திமுக ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்களும், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த நாளே இடிந்து விழுகின்றன. அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி மையங்கள், வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்து, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழக சமூக நலத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உடனடியாக, தமிழகம் முழுவதும், தனியார் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். திமுகவினர் சம்பாதிப்பதற்காக, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : “மதுரை மாநாடு என்னைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.. 1967, 77 போல் மாற்றம் நடக்கும்..” விஜய் நம்பிக்கை!

RUPA

Next Post

மனதை உடைக்கும் சம்பவம்: தனியார் மருத்துவமனையின் அலட்சியம்.. இறந்த பச்சிளம் குழந்தையை பையில் சுமந்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் சென்ற தந்தை.. Video!

Sat Aug 23 , 2025
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இருந்து ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் முழு சம்பவத்தையும் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “ என் பெயர் விபின் குப்தா. […]
up father viral video

You May Like