ஆக்ஸியம்-4 மிஷன்!. சுபன்ஷு சுக்லா குழுவினர் ஜூலை 14க்குள் திரும்புவது சாத்தியமில்லை!. ESA தகவல்!

shubhanshu shukla 14091589

ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச்சென்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஜூன் 25ம் தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள், 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை ஜூன் 26 மாலை 4.30 மணிக்கு அடைந்தனர்.


இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரர் என்ற பெருமை பெற்றார். 15 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில், ஆக்ஸியம்-4 மிஷனின் நான்கு பேர் கொண்ட குழுவினர் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அவற்றில் ஏழு இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளன.

இதையடுத்து, விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவுடன் சமீபத்தில் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது சுக்லா விண்வெளி பயணங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவருடன் உணர்வுகளை பகிர்ந்துகொண்ட மோடி, “தாய்மண்ணை விட்டு தூரம் இருந்தாலும், இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமாக உள்ளீர்கள். நாம் இருவரும் தற்போது பேசுகிறோம் ஆனால், 140 கோடி இந்தியர்களின் உணர்வு என்னுடன் இருக்கிறது. எனது குரலில் இருக்கும் உற்சாகம், அனைத்து இந்தியர்களையும் பிரதிபலிக்கிறது. நமது தேசியக் கொடியை விண்வெளி கொண்டு சென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். அங்கு அனைத்தும் சரியாக உள்ளதா? நீங்கள் நலமா?” என்று நெகிழ்ச்சியுடன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு பேசினார்.

இந்தநிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தற்போது உள்ள Axiom-4 (Ax-4) மிஷன் குழுவினர் ஜூலை 14 ஆம் தேதிக்கு முன்பு பூமிக்குத் திரும்ப மாட்டார்கள் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ( ESA ) தெரிவித்துள்ளது. . இதன் மூலம் மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், மிஷன் பைலட் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா மற்றும் மிஷன் நிபுணர்களான ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் திபோர் கபு ஆகியோர் அடங்கிய AX-4 மிஷன், கீழ் சுற்றுப்பாதை ஆய்வக பணி நீட்டிக்கிறது.

மேலும், திரும்பும் தேதி குறித்து இஸ்ரோவிடமிருந்து எந்த பொது உறுதிப்படுத்தலும் இல்லை. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், ESA திட்ட விண்வெளி வீரர் ஸ்வாவோஷ் உஸ்னான்ஸ்கி-விசினெவ்ஸ்கி (Sławosz Uznański-Wiśniewski), பூமிக்குத் திரும்பும் தேதி ஜூலை 14-க்கு முன்னதாக இருக்காது என்று தெரிவித்துள்ளது. “இந்த தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை; அவர் திரும்பும் இடம் ஜெர்மனியின் கோலோன் (Cologne) நகராகும். இந்நகரம் தான் ஐரோப்பிய விண்வெளி மையம் அமைந்துள்ள இடமாகும். அது டிராகன் விண்கலம் அந்நகரத்திலிருந்து பிரியும் நேரத்தைப் பொருத்தே அமையும்,” என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்வாவோஷ் உஸ்னான்ஸ்கி-விசினெவ்ஸ்கி புவிக்கு வந்த உடனேயே, அவர் ஐரோப்பிய விண்வெளி மையம் மற்றும் ஜெர்மன் ஏரோகம்பி மையமான (German Aerospace Centre – DLR) நவீன வசதிகளுடன் கூடிய ‘envihab’ உள்கட்டமைப்பிற்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி நிலையத்தில் (ISS) பணியைத் தொடங்கியதிலிருந்து, Axiom Space நிறுவனம் தெரிவித்ததாவது, வீரர்கள் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை முன்னெடுத்து, புதிய தொழில்நுட்பங்களை சோதித்து, உலகளாவிய மக்கள் தொடர்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதுடன், Ax-4 குழுவினர், 31 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 60 அறிவியல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குழுவின் முக்கிய உறுப்பினரான இந்தியாவின் ஷுபாஷு ஷுக்லா, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட ஏழு (7) மைக்ரோகிராவிட்டி (microgravity) ஆய்வுகளை நடத்தி வருகிறார். மேலும், இஸ்ரோ – நாசா (ISRO-NASA) இணைப்பின் கீழ் ஐந்து (5) முக்கிய அறிவியல் முயற்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார். அங்கு அவர், வெந்தயம், பச்சை பயிறு வளர்த்து வருகிறார். பெட்ரி டிஷ்களில் முளைக்கும் பச்சைப்பயறு மற்றும் வெந்தய விதைகளின் புகைப்படங்களை எடுத்து, விதை முளைப்பு மற்றும் தாவர வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தை நுண் ஈர்ப்பு விசை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வை சுக்லா மேற்கொண்டு உள்ளார்.

இந்த விண்வெளி பயணத்தின் முக்கியமான பகுதி, மயோஜெனிசிஸ் எனப்படும் ஆய்வாகும். இது நுண் ஈர்ப்பு விசையில் தசை சிதைவை எவ்வாறு விரைவாக்குகிறது என்பதை ஆராய்கிறது. நிலையற்ற ஈர்ப்பு விசை இருக்கும் சூழலில், விண்வெளி வீரர்களின் எலும்புத் தசைகள் சீரான முறையில் சிதையக்கூடிய அபாயம் உள்ளது. இந்த மாற்றங்கள் மூலக்கூறு மற்றும் செல்லுலார் நிலை மாற்றங்களை உள்ளடக்கியதாக இருப்பதால், இந்த ஆய்வு எதிர்கால மற்றும் நீண்டகால விண்வெளி வாழ்வை உருவாக்குவதில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Readmore: பள்ளிகளில் இனி லாஸ்ட் பெஞ்ச் கிடையாது.. எல்லாருமே ஃபர்ஸ்ட் பெஞ்ச் தான்..!! – கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வந்த திரைப்படம்

KOKILA

Next Post

காலையிலே கோரம்.. இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

Thu Jul 10 , 2025
அருப்புக்கோட்டை அருகே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் பாலையம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணியளவில் கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நெர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உட்பட […]
accident 3

You May Like