ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் ஆதர்ஷ் வித்யா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிராச்சி குமாவத் என்ற 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பள்ளி முதல்வர் நந்த் கிஷோர் பேசிய போது, “இது நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. மதிய உணவு இடைவேளையின் போது அவர் தனது லஞ்ச் பாக்ஸை திறந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி வழுந்தார்.. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
பள்ளியில் மாணவர்கள் மயக்கம் அடைவது புதிதல்ல, நாங்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தவுடன் குழந்தைகள் பொதுவாக குணமடைவார்கள். இருப்பினும், அந்த சிறுமியின் நிலைமை வேறுபட்டது. எனவே, நாங்கள் அவளை சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு (CHC) அழைத்துச் சென்றோம். அங்கு, மருத்துவ ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆரம்பத்தில் அவர் குணமடைந்துவிட்டதாகத் தோன்றியது.
இருப்பினும், அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அவர் மருத்துவமனையை அடைந்தாளா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் ஆம்புலன்ஸ் மதியம் 12:15 மணியளவில் புறப்பட்டது. சுமார் மதியம் 1:30 மணியளவில், அந்த மாணவி இறந்துவிட்டாள் என்று எங்களுக்குத் தெரியவந்தது..” என்று முதல்வர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ” பிராச்சி ஒரு புத்திசாலியான குழந்தை, எப்போதும், மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருப்பார்..” என்று தெரிவித்தார்..
சமூக சுகாதார மையத்தின் மருத்துவர் ஆர் கே ஜாங்கிட் இதுகுறித்து பேசிய போது, “ பள்ளியில் பிராச்சிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நாங்கள் அவளுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து இதயத்தை மீண்டும் உயிர்ப்பித்தோம். மீண்டும் ஒரு மாரடைப்பு ஏற்பட்டது.. பின்னர் நாங்கள் அவளை சிகாரில் உள்ள ஸ்ரீ கல்யாண் (அரசு) மருத்துவமனைக்கு பரிந்துரைத்தோம், ஆனால் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே அவள் இறந்துவிட்டாள். அந்த சிறுமிக்கு பிறவி இதய நோயோ அல்லது இதய நோய்களின் வரலாறு எதுவும் இல்லை..” என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Read More : டைப் 2 நீரிழிவு நோய்க்கு தனிமை ஒரு காரணமா..? – எச்சரிக்கும் புதிய ஆய்வு முடிவுகள்