Bank Holidays | அக்டோபர் மாதம் இந்த நாட்களில் வங்கி பக்கமே போகாதீங்க..!! இத்தனை நாட்கள் விடுமுறையா..?

Bank Holiday 2025

அக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர் 5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபரில் மட்டும் 15 நாட்களுக்கும் மேல் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.


அக்டோபரில் வரும் முக்கிய விடுமுறைகளின் விவரம் :

அக்டோபர் 1: மகாநவமி, தசரா, விஜயதசமி, மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகளை கொண்டாடும் தமிழ்நாடு, திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உட்பட பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 2: தசரா, விஜயதசமி, துர்கா பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற காரணங்களுக்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் இயங்காது.

அக்டோபர் 20: தீபாவளி, நரக சதுர்தசி மற்றும் காளி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு மகாராஷ்டிரா, ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், ஜம்மு, காஷ்மீர் மற்றும் பீகார் தவிர மற்ற மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.

அக்டோபர் 21 – 23 (தீபாவளி வார விடுமுறை): தீபாவளி அமாவாசை, லட்சுமி பூஜை, கோவர்தன் பூஜை, பலிபிரதிபதா மற்றும் பாய் தூஜ் போன்ற பண்டிகைகள் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்ப இந்த 3 நாட்களும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். உதாரணமாக, அக்டோபர் 22 அன்று குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.

அக்டோபர் 27, 28: சத் மஹாபர்வம் பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.

அக்டோபர் 31: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளைத் திட்டமிடும்போது, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் விடுமுறை அட்டவணையை உறுதி செய்துகொண்டு செயல்படுவது நல்லது.

Read More : மெட்டியை வெள்ளியில் மட்டும் ஏன் அணிய வேண்டும் தெரியுமா..? ஜோதிடம் சொல்லும் உண்மை காரணம் இதுதான்..!!

CHELLA

Next Post

உஷார்!. கண்களுக்கு கீழ் இந்த நிறங்களில் கருவளையங்கள் தெரிகிறதா?. ஆபத்து!. நிபுணர் எச்சரிக்கை!.

Mon Sep 29 , 2025
கண்களுக்குக் கீழே நீலம் மற்றும் பழுப்பு நிறங்களில் ஏற்படும் கருவளையம் தூக்கமின்மையால் மட்டும் ஏற்படுவதில்லை; அவை ஒரு அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுவது இன்றைய காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் அவற்றை தூக்கமின்மையுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இருப்பினும், அவற்றுக்குப் பின்னால் வேறு பல காரணங்கள் இருக்கலாம். ஊட்டச்சத்து நிபுணர் சலோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், […]
dark circles

You May Like