பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (BOI) தேசிய அளவில் கிரெடிட் அதிகாரி பதவிக்கு 514 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
கிரெடிட் அதிகாரி (SMGS-IV) – 36
கிரெடிட் அதிகாரி (MMGS-III) – 60
கிரெடிட் அதிகாரி (MMGS-II) – 418
வயது வரம்பு: SMGS-IV பிரிவிற்கு 30 முதல் 40 வரையும், MMGS-III பிரிவிற்கு 28 முதல் 38 வரையும், MMGS-II பிரிவிற்கு 25 முதல் 35 வயது வரையும் இருக்கலாம்.
கல்வித்தகுதி:
SMGS–IV பிரிவு
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
- எம்பிஏ (MBA) அல்லது பிஜி டிப்ளமோ (PG Diploma) முடித்திருக்க வேண்டும்
- அல்லது முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்றிருக்க வேண்டும்
- அல்லது சிஏ (CA) தகுதி பெற்றிருக்க வேண்டும்
- குறைந்தபட்ச அனுபவம்: 8 ஆண்டுகள்
MMGS–III பிரிவு
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
- பட்டய கணக்காளர் (CA) / பட்டய நிதி ஆய்வாளர் (CFA) / CMA – ICWA தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை
- குறைந்தபட்ச அனுபவம்: 5 ஆண்டுகள்
MMGS–II பிரிவு
- ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு
- CA / CFA / CMA – ICWA தகுதி பெற்றவர்கள் அல்லது எம்பிஏ (MBA) / பிஜி டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை
- குறைந்தபட்ச அனுபவம்: 3 ஆண்டுகள்
சம்பளம்:
SMGS-IV ரூ.1,02,300 – ரூ.1,20,940
MMGS-III ரூ.85,920 – ரூ.1,05,280
MMGS-II ரூ.64,820 – ரூ.93,960
தேர்வு செய்யப்படும் முறை: பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில், ஏதேனும் ஒரு தேர்வு முறை மட்டும் (ஆன்லைன் தேர்வு அல்லது நேர்காணல்) கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு – ஆங்கிலம், காரணி, நுண்ணறிவு, பணிக்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகள் கொண்டு அமையும். மொத்தம் 120 நிமிடங்கள் தேர்விற்கு அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தின் வழியாக கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: 05.01.2026
Read more: உங்கள் மொபைல் போனில் இந்த 3 செயலிகள் இருந்தால், உடனே நீக்கிவிடுங்கள்! அரசாங்கம் எச்சரிக்கை!



