மாதம் ரூ.1,56,500 சம்பளம்.. முன்னணி வங்கியில் வேலை.. அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!! 

bank job 1

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான மகாராஷ்டிரா வங்கி, 2025–26 நிதியாண்டிற்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 350 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.


காலிப்பணியிட விவரங்கள்:

  • டெபியுட்டி ஜெனரல் மேனேஜர்
  • உதவி ஜெனரல் மேனேஜர்
  • தலைமை மேனேஜர்
  • சீனியர் மேனேஜர்
  • மேனேஜர்

வயது வரம்பு:

* டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.

* உதவி ஜெனரல் மேனேஜர் பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம்.

* தலைமை மேனேஜர் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம்.

* சீனியர் மேனேஜர் பதவிக்கு 25 முதல் 38 வரை இருக்கலாம்.

* மேனேஜர் பதவிக்கு 22 முதல் 35 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் BE/ B.Tech, B.Sc/M.Sc, CA, CFA, CMA, MCA எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். பதவியை பொறுத்து அனுபவம் மாறுப்படும். குறைந்தபட்சம் 3 முதல் அதிகபடியாக 12 வருடங்கள் வரை அனுபவம் தேவை.

சம்பளம்:

  • டெபியூட்டி ஜெனரல் மேனேஜர் – ரூ. 1,40,500 முதல் 1,56,500 வரை
  • உதவி ஜெனரல் மேனேஜர் – ரூ. 1,20,940 முதல் 1,35,020 வரை
  • தலைமை மேனேஜர் – ரூ. 1,02,300 முதல் 1,20,940 வரை
  • சீனியர் மேனேஜர் – ரூ. 85,920 முதல் 1,05,280 வரை
  • மேனேஜர் – ரூ. 64,820 முதல் 93,960 வரை

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால், எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம். இறுதி தேர்வு நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். நேர்காணலுக்கு வருபவர்கள், அனைத்து அசல் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பாணை வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்கும் நபர்கள் https://bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2025.

Read more: எடை இழப்புக்கு உதவும் கருப்பு மிளகு.. தினமும் இப்படி எடுத்துக்கோங்க..! செமயா ரிசல்ட் கிடைக்கும்..!!

English Summary

Bank of Maharashtra has released the second phase of recruitment notification for the financial year 2025-26.

Next Post

11 வயது இளவரசரிடம் இருந்து கிரீடம், கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் திருடியது எப்படி? ஒரு மன்னரின் மறக்கப்பட்ட கதை..

Tue Sep 16 , 2025
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரி, மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.. பனி போர்த்திய அழகான மலைகள், குளிர்ந்த காற்று ஆகியவற்றை தாண்டி, இந்த பள்ளத்தாக்குகளில் ஒரு இளம் மன்னரின் மறக்கப்பட்ட கதை மறைந்துள்ளது. இந்த மன்னர் தனது அரியணையை மட்டுமல்ல, புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் ஒருக்கட்டத்தில் தனது அடையாளத்தையும் இழந்தார். ஆம்.. இது பஞ்சாபின் கடைசி சீக்கிய ஆட்சியாளரும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகனுமான மகாராஜா துலீப் சிங்கின் கதை. […]
duleep singh

You May Like