2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இழுபறியில் இருந்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 போட்டிக்கான அனைத்து தடைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது..
டாக்காவில் இன்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆண்டு பொதுக் கூட்டத்தின் (ஏஜிஎம்) போது ஆசிய கோப்பை குறித்து விவாதிக்கப்பட்டது, இதில் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் வீடியோ கான்ஃபிரன்ஸ் முறையில் கலந்து கொண்டனர். அப்போது இந்த போட்டியை இந்தியா நடத்தினாலும், ஒரு நடுநிலையான இடத்தில் போட்டியை நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்தது..
துபாய் மற்றும் அபுதாபியில் இந்த போட்டியை நடத்தலாம் என்று பிசிசியை பரிந்துரைத்தது… மூன்று இடங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், துபாய், அபுதாபு ஆகிய இடங்களில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது..
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் இந்த போட்டியில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.. 8 அணிகள் கொண்ட ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை பிசிசிஐயிடம் உள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவருமான மொஹ்சின் நக்வி ஆகியோர் விரைவில் சந்தித்து போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் போட்டி அட்டவணையை இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..
செப்டம்பர் 7 முதல் மாதத்தின் 3வது அல்லது 4வது வாரம் வரை போட்டியை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.. எனினும் பிசிசிஐ அதிகாரப்பூர்வ அட்டவணையை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன..
கடந்த வாரம், இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே நிலவும் இருதரப்பு நெருக்கடியைக் காரணம் காட்டி, டாக்காவில் கூட்டம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொள்ள மாட்டோம் என்று பிசிசிஐ ஏசிசியிடம் தெரிவித்திருந்தது. இருப்பினும், புதன்கிழமை, ராஜீவ் சுக்லா கூட்டத்தில் மெய்நிகர் முறையில் பங்கேற்பார் என்று ஆசிய கிரிக்கெட் கமிட்டிகு அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, ஆகஸ்ட் 2025 இல் நடைபெறுவதாக இருந்த இந்திய – வங்கதேசம் இடையிலான தொடர், இரு நாடுகளின் உறவுகளில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி…! 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை…! உடனே விண்ணப்பிக்கவும்