பெண்களே உஷார்.. இவை தான் மாரடைப்பின் அறிகுறிகள்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் ஆண், பெண் என இரு பாலினருக்கும் சமமாக பரவுகின்றன.

ஆபத்து..!! இளம் வயதிலேயே உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா..? என்ன செய்ய வேண்டும்..?

ஆனால் இளம் வயது பெண்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் மன அழுத்தம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை காரணமாக இதய நோய்க்கு ஆளாக நேரிடும். மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல காரணங்களால் பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது..

எனினும் இதயக் கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அவற்றை தடுக்கலாம். பல பெண்கள் பெரும்பாலும் மாரடைப்பின் அறிகுறிகளை மாதவிடாய் நிறுத்தத்தின் விளைவுகளுடன் குழப்பி கொள்கின்றனர்.. இதனால் அவர்களுக்கு இதய நோய் அபாயத்தை அதிகமாகிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான மாரடைப்பு அறிகுறிகளைப் பற்றிய புரிதல் இல்லாததால் ஆரம்ப கட்டத்தில் புறக்கணிக்கப்படுகிறது. மேலும் மாரடைப்பு அறிகுறிகள் ஆண்களில் இருந்து பெண்களுக்கு வேறுபடுகின்றன..

பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன.?

  • நெஞ்சு வலி
  • மார்பில் அழுத்தம்
  • கழுத்து அல்லது தாடை வலி
  • மூச்சு திணறல்
  • அசாதாரண சோர்வு
  • உயர் இரத்த அழுத்தம்

ஒருசில வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். இதய நோய்கள் வராமல் இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்..

புகைபிடிப்பதை தவிர்ப்பது: புகை பிடிப்பது என்பது ஆண், பெண் இருவருக்குமே மிகவும் ஆபத்தானது. இது புதிய காற்றின் விநியோகத்தை கட்டுப்படுத்துகிறது, மேலும் இது ஒரு நபரை மாரடைப்புக்கு ஆளாக்குகிறது. புகைபிடித்தல் என்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஆரோக்கியமான உணவுமுறை: கொழுப்புச் சத்து குறைவாக உள்ள ஆரோக்கியமான உணவு, உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. கொழுப்பு இல்லாத பொருட்கள் மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகள், தமனிகளில் கொழுப்பு சேகரிக்கப்படுவஹை தவிர்க்க உதவும்.

வேலை-வாழ்க்கை சமநிலை: மன அழுத்தமில்லாத வாழ்க்கையைப் பராமரிக்க உங்கள் தினசரி மற்றும் வேலை நேரங்கள் சமநிலையில் இருக்க வேண்டும். அதிக நேரம் வேலை செய்வது உங்கள் தூக்க சுழற்சியை பாதிக்கலாம். மேலும் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம், இது இதய நோய்களை விளைவிக்கலாம்.

வழக்கமான பரிசோதனைகள்: பெண்களுக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும். எனவே, மேம்பட்ட நிலையில் எந்த அடிப்படை இதய நிலையையும் கண்டறிவதைத் தவிர்ப்பதற்கு வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

1newsnationuser1

Next Post

JIPMER வேலைவாய்ப்பு!... ரூ.56,000 சம்பளம்!... மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!

Thu Mar 23 , 2023
JIPMER ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜிப்மர் ஆணையத்தில் காலியாக உள்ள Junior Resident பணிகளை நிரப்புவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, Junior Resident […]
Jipmer

You May Like