பெற்ற தாயே தனது பச்சிளம் குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் உள்ள நெலமங்கலா நகரில் பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.. இதுதொடர்பாக ராதா என்ற 27 வயதான பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாவுக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும், பிறந்ததிலிருந்தே குழந்தை பால் குடிக்காமல், தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தை சாதாரணமாக இல்லை என்று நம்பிய ராதா பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன…
மேலும் ராதாவின் கணவர் எந்த வேலைக்கும் செல்லாமல், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்துள்ளார். விஸ்வேஸ்வரபுராவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் ராதா வசித்து வந்த நிலையில், அவரை பார்ப்பதையும் கணவர் நிறுத்திவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் “ நேற்று அடுப்பை பற்றவைத்த ராதா, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, பின்னர் அவர் குழந்தையை பாத்திரத்தில் வைத்துள்ளார், இதனால் குழந்தை இறந்தது..” என்று போலீசார் தெரிவித்தனர். பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
Read More : நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு.. அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்.. உயிர் தப்பிய 51 பயணிகள்..