நாகை மாவட்டம் ஆழியூர் பகுதியைச் சேர்ந்தவர் குணா (37). இவர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். குணாவின் சகோதரிக்கு நாகையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் காவலர் குணா தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், குணாவின் சகோதரியின் மூத்த மகளான பிளஸ் டூ படிக்கும் மாணவி, மாமா என்ற முறையில் குணாவுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட காவலர் குணா, அந்தச் சிறுமியிடம் அத்துமீறிப் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குணாவின் பாலியல் தொல்லையை சிறுமியால் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக அச்சிறுமியே நேரடியாக குழந்தைகள் நலக் குழுமத்தில் புகார் அளித்துள்ளார். இந்த குழுமம் சார்பில் உடனடியாக நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரைப் பதிவு செய்த மகளிர் காவல் துறை அதிகாரிகள், பிளஸ் டூ மாணவி, அவரது தாய் மற்றும் காவலர் குணா ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காவலர் குணா மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து, காவலர் குணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவலர் குணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Read More : கரூரில் சோகம்..!! நிலைதடுமாறிய மினி லாரி..!! சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 3 தொழிலாளர்கள்..!!



