பரவலாக பயன்படுத்தப்படும் வயிற்று அமிலத்தன்மை குறைக்கும் மருந்தான ரானிட்டிடின் (Ranitidine) என்ற மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், NDMA அளவை கண்காணிக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மத்திய மருந்துத் தரநிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உத்தரவிட்டுள்ளது.
ரானிடிடின் (Ranitidine) என்பது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைக்கும் ஒரு மருந்து. இது அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ், இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GORD – நீங்கள் தொடர்ந்து அமில ரிஃப்ளக்ஸ் பெறும்போது) மற்றும் வயிற்றுப் புண்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், இதில் புற்றுநோய் NDMA என்ற புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ள தீங்கு விளைவிக்கும் பொருளின் அளவை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கண்காணிப்பு, செயலில் உள்ள மருந்து பொருள் (API) மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்து ஆகிய இரண்டிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த மருந்தின் சேமிப்புக் காலத்தை குறைக்கவும் CDSCO பரிந்துரைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி DTAB நடத்திய 92வது கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையைத் தொடர்ந்து, DCGI டாக்டர் ராஜீவ் சிங் ரகு்வன்ஷி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.”
“ரானிட்டிடின் மருந்தில் உள்ள NDMA பற்றிய தீங்கு சந்தேகங்களை ஆய்வு செய்ய 2024 டிசம்பரில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை DTAB பரிசீலித்தது. அதன் அடிப்படையில், NDMA உருவாகக்கூடிய சேமிப்பு சூழ்நிலைகள் உட்பட அனைத்தையும் ஆய்வு செய்ய மேலும் பெரிய குழுவை அமைக்க DTAB பரிந்துரைத்துள்ளது.” மேலும், ரானிட்டிடின் மருந்தில் NDMA இருப்பதை கருத்தில் கொண்டு, அதன் நீண்டகால பாதுகாப்பை மேலும் மதிப்பீடு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் மருந்தை சேமிக்கும் நாட்கள் அதிகரித்தால், அதில் வேதியல் மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே, இந்த மருந்தின் சேமிப்புக் காலத்தை குறைப்பது, சேமிப்பு வழிமுறைகளை மாற்றுவது மற்றும் NDMA சோதனை முறைமைகளை அவர்களது விநியோக முறைகளை மேம்படுத்துவது போன்ற ஆபத்து அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு ரானிட்டிடின் மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“ரானிட்டிடின் மருந்து, மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ள (Group 2A carcinogen) வகையில் வருவதாக, உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) குறிப்பிடுகிறது. இதன் பொருள், இது புற்றுநோய்க்கு காரணமாக இருக்கக்கூடிய மருந்து என கருதப்படுகிறது. பாதுகாப்பான மாற்றுகள் (புதிய மருந்துகள்) போன்ற பாமொட்டிடின் (Famotidine) மற்றும் பான்டோப்ராஸோல் (Pantoprazole) போன்றவை இருக்கும்போது, ரானிட்டிடின் மருந்தை தொடர்ந்தும் நோயாளிகளுக்கு பரிசீலனை செய்யக்கூடாது,” என்று AIIMS டெல்லியின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர் கூறினார்.
NDMA என்பது மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ள பொருள் (probable human carcinogen) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மருந்துகளில் NDMA இருப்பது, கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய கட்டுப்பாட்டு அமைப்புகளின் தீவிர கவனத்தை பெற்றுள்ளது. அமிலத்தன்மை (acid reflux) மற்றும் அல்சர் (புண்) போன்ற நிலைகளுக்காக பரவலாக பரிந்துரைக்கப்படும் ரானிட்டிடின் மருந்து, சில மாதிரிகளில் ஆபத்தான அளவு NDMA கண்டுபிடிக்கப்பட்டதால், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் விற்பனை திரும்பப்பெறப்பட்டது.
Readmore: பொதுத்துறை வங்கியில் 1500 பணியிடங்கள்.. டிகிரி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!