உங்களுக்கே தெரியாமல் உங்கள் பணத்தை திருடும் 20 ஆப்ஸ்கள்… உடனே இதை செய்யுங்க…

20 Dangerous Apps

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள், கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளை கூகுள் நிறுவனம் அவ்வபோது சோதனை செய்கிறது. அதில் பிரச்னைகளுக்கு உள்ளாகும் செயலிகள் உடனடியாக நீக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வந்துள்ளன. அந்த வகையில் தற்போது பயனாளிகளுக்கு தெரியாமலேயே அவர்களின் மொபைல் போனில் இருந்து தகவல்களை திருடியதாக 20 செயலிகள் கண்டறியப்பட்டுள்ளது.


அதாவது, இந்தியாவிலுள்ள Cyber Research and Intelligence Lab (CRIL), Android பயனர்களுக்காக ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிரிப்டோ பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடும் பயனர்கள், தற்போது போலி கிரிப்டோ வாலெட்டுகள் மூலம் நடைபெறும் பெரிய அளவிலான phishing மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது.

சமீபத்திய ஒரு ஆராய்ச்சி அறிக்கையில், Cyber Research and Intelligence Lab (CRIL), Google Play Store-இல் 20-க்கும் மேற்பட்ட போலியான மற்றும் திருடும் செயலிகள் இருப்பதை கண்டறிந்துள்ளது. இவை உண்மையான cryptocurrency wallets போலவே தோன்றி, பயனர்களை ஏமாற்றி அவர்களது மதிப்புமிக்க கிரிப்டோ சொத்துகளை களவாடுகின்றன.

மோசடி எவ்வாறு செயல்படுகிறது? இந்த ஆப்ஸ் உங்கள் கிரிப்டோ வாலெட்டுகளை இலக்காகக் கொண்டுள்ளன. SushiSwap, PancakeSwap, Raydium, Hyperliquid, மற்றும் Suiet Wallet போன்ற நம்பகமான தளங்களைப் போலவே தோன்றும் இவை, பயனர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களது அரிய நுழைவு விபரங்களை (login details) திருடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மோசடியான செயலிகள் ஏற்கனவே இந்தியாவில் லட்சக்கணக்கான நபர்களை ஏமாற்றியுள்ளன. எனவே, உங்களுடைய கிரிப்டோ வாலெட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்துங்கள் மற்றும் உங்களது தனிப்பட்ட விபரங்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyber Research and Intelligence Lab (CRIL) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 20-க்கும் மேற்பட்ட போலி cryptocurrency wallet செயலிகள் தற்போது Google Play Store-ல் உள்ளன. இவை நம்பகமான கிரிப்டோ வாலெட்டுகளாக நடித்துத் தோன்றி, பயனர்களை மோசடிக்குள்ளாக்குகின்றன. போலி கிரிப்டோ வாலெட்டுகள் தற்போதுள்ள மிகவும் அபாயகரமான மொபைல் மோசடி வகைகளில் ஒன்றாக கருதப்படுகின்றன. இவை பிரபலமான கிரிப்டோ வாலெட்டுகளின் தோற்றத்தை (interface, logo, app name) முழுமையாக நகலெடுத்து, பயனர்களை உண்மையென நம்ப வைக்கும்.

பயனர்கள் என்ன செய்வார்கள்? என்ன நடக்கும்? App-ஐ Play Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்கிறார்கள். App திறக்கும்போது, 12 வார்த்தைகளைக் கொண்ட recovery phrase-ஐ (seed phrase) உள்ளிடச் சொல்லப்படுகிறது. பயனர் அதை உள்ளிடும் போது, அந்த phrase நேரடியாக மோசடிக்காரரிடம் செல்லும். அந்த recovery phrase மூலம், நிஜமான கிரிப்டோ வாலெட்டில் உள்ள சொத்துகள் திருடப்படுகின்றன.

தற்போது Google Play Store-ல் உள்ளது போன்ற போலி கிரிப்டோ வாலெட்டுகள் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட கும்பலால் நடத்தப்படும் மோசடி என எச்சரிக்கப்படுகிறது. ஏனென்றால், Crypto பணப் பரிவர்த்தனைகள் மாற்ற முடியாதவை ஒருமுறை பணம் திருடப்பட்டால், அதை மீண்டும் பெற முடியாது. இந்த செயலிகள் Play Store-ல் இருப்பதால், நம்பத்தகுந்ததாகத் தோன்றும். ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் (fake domains) உள்ளடக்கியது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?உங்கள் 12 வார்த்தைகளைக் கொண்ட recovery phrase (seed phrase)-ஐ, உண்மையானது என்பதை முழுமையாக உறுதி செய்யாத வரை, எந்தவொரு செயலி அல்லது இணையதளத்திலும் உள்ளிட வேண்டாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட இணைப்புகளிலிருந்து எப்போதும் வாலட் செயலிகளைப் பதிவிறக்கவும். நிறுவுவதற்கு முன் பயன்பாட்டு மதிப்புரைகள், டெவலப்பர் பெயர்கள் மற்றும் பதிவிறக்க வரலாற்றைச் சரிபார்க்கவும். தீங்கிழைக்கும் செயலிகள் மற்றும் நடத்தையை ஸ்கேன் செய்யும் பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்தவும்.

Readmore: தீவிரமடைந்த லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்!. ஆப்பிள் ஷோரூமை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்!. ஐபோன்களை கொள்ளையடித்து சென்ற பயங்கரம்!

KOKILA

Next Post

முடி உதிர்வு முதல் பொடுகு தொல்லை வரை.. எண்ணெயை சூடாக்கி தடவினால் எத்தனை நன்மைகள் தெரியுமா..?

Wed Jun 11 , 2025
அழகாக இருக்க சரும பராமரிப்பை பின்பற்றுவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் அவசியம். தலைமுடி பராமரிப்பின் ஒரு பகுதியாக உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்து தேவை. அந்த ஊட்டச்சத்து எண்ணெயிலிருந்து பெறப்படுகிறது. தலையில் எண்ணெய் தடவுவது என்றால்.. சாதாரணமாக தடவுவதற்கு பதிலாக.. அதை சூடாகப் பயன்படுத்த வேண்டும். எண்ணெயை சூடாக்கி, தலைமுடியில் மசாஜ் செய்வதன் மூலம், முடி அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். மேலும்.. இப்போது சூடான […]
hair oil

You May Like