இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், பள்ளி, வங்கிகள் மூடப்படுமா? தமிழ்நாட்டில் பேருந்துகள் இயங்குமா? என்பது குறித்து பார்க்கலாம்..
இந்தியாவில் உள்ள 10 மத்திய தொழிற்சங்கங்களின் மன்றம் இன்று நாடு தழுவிய பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வங்கி, காப்பீடு, அஞ்சல் மற்றும் கட்டுமானம் போன்ற பொது சேவைத் துறைகளில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கி, தபால், நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள், மாநில போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வங்கிகள் மூடப்படுமா?
இன்று நடைபெறும் பாரத் பந்தில் வங்கித் துறையும் இணையும் என்று வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்துடன் (AIBEA) இணைந்த வங்காள மாகாண வங்கி ஊழியர் சங்கம், காப்பீட்டுத் துறையும் இந்த வேலைநிறுத்தத்தில் இணையும் என்று மேலும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் இன்னும் வங்கி விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படுமா?
பாரத் பந்த் அழைப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. எனவே அவை தடையின்றி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தத்தின் போது மின் தடை ஏற்படுமா?
ஜூலை 9 ஆம் தேதி 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பாரத் பந்தில் பங்கேற்பதால் நாட்டில் மின்சார விநியோகமும் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது..
ரயில்வே செயல்படுமா?
பாரத் பந்த் காரணமாக நாடு தழுவிய ரயில்வே வேலைநிறுத்தம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை. ஆனால் போராட்டங்கள் காரணமாக ரயில் சேவைகளில் தாமதம் அல்லது இடையூறுகள் ஏற்படலாம்..
தமிழ்நாட்டில் பேருந்துகள் இயங்குமா?
தமிழ்நாட்டில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தினசரி கால அட்டவணைப்படி எந்த வித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் பேருந்துகள் இயக்கப்படுவதை தடுத்தால் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.. பேருந்துகள் இயக்கம் தொடர்பான தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பனிந்திர ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.. மேலும் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Read More : இந்த 17 மருந்துகளை குப்பையில் வீசக்கூடாது, டாய்லெட்டில் ஃப்ளஷ் செய்யணும்.. CDSCO எச்சரிக்கை..