சமீபத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டியாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது..
பீகார் தேர்தலில் முக்கியப் போட்டி நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையேதான். தற்போதைய ஜே.டி.(யு) தலைவர் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதலமைச்சராவதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.. இருப்பினும், அவர் இன்னும் முதல்வர் பதவிக்கான அதிகாரப்பூர்வ NDA வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே , ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், முதல் முறையாக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்..
இந்த நிலையில் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.. பீகாரின் ரகோபூரில் போட்டியிட்ட தேஜஸ்விக்கும் பாஜக வேட்பாளர் சதீஷ் குமாருக்கும் இடையேயான வாக்குகளில் குறைந்த வித்தியாசம் காணப்பட்டது.. ஆனால் தற்போது இந்த இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. தற்போது பாஜக வேட்பாளரை விட சுமார் 3000 வாக்குகள் தேஜஸ்வி பின் தங்கி உள்ளார்.. இதனால் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வியே இந்த தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது..



