மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் செயல்படுகிறது. அந்த வகையில், காசியாபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 49 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரங்கள்:
இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் டிரைய்னி – 22
- எலெக்ட்ரிக்கல் – 12
- கணினி அறிவியல் – 2
- எலெக்ட்ரானிக்ஸ் – 1
- மெக்கானிக்கல் – 7
டெக்னீஷியன் – 27
- எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 15
- எலெக்ட்ரிஷியன் – 1
- பிட்டர் – 11
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிறைந்து இருக்க வேண்டும். அதிகபடியாக அக்டோபர் 1-ம் தேதியின்படி, 28 வயது வரை இருக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
* இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் டிரைய்னி பதவிக்கு, எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* டெக்னீஷியன் பதவிக்கு, எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலெக்ட்ரிஷியன், பிட்டர் போன்ற துறைகளில் ஐடிஐ (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது.
* இப்பணியிடங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பளம்:
* இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் டிரைய்னி பதவிக்கு ரூ.24,500 முதல் அதிகபடியாக ரூ.90 ஆயிரம் வரை வழங்கப்படும்.
* டெக்னீஷியன் பதவிக்கு ரூ.21,500 முதல் அதிகபடியாக ரூ.82,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் கணினி வழி தேர்வின் (Computer Based Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்விற்கு அழைக்கப்படுவோருக்கு அட்மிட் கார்டு இச்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
- தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
- பொது நுண்ணறிவு – 50 மதிப்பெண்கள்
- டெக்னிக்கல் நுண்ணறிவு – 100 மதிப்பெண்கள்
- தேர்ச்சி பெற, இரு பகுதிகளிலும் சேர்த்து குறைந்தது 35% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
- எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 30% மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://bel-india.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: Breaking : இன்றும் புதிய உச்சம்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?