எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கில் வசிக்கும் போடி பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் நடத்தும் ஒரு விசித்திரமான திருவிழா சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘கேல் திருவிழா’ என அழைக்கப்படும் இந்த விழாவில், உடல் பருமனே பெரிய தொப்பையே வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. இவர்களை திருமணம் செய்துகொள்ள பெரும் போட்டாபோட்டியே நிலவும்.
ஆனால் இது ஒன்றும் அவ்வளவு சுலபத்தில் நடந்துவிடாது. ஏனெனில், பழங்குடியினர் உணவை வேட்டையாடி பெரும் வாழ்க்கை முறையினை கொண்டிருப்பவராவார்கள். இதனால் இவர்கள் உடல்களில் கொழுப்புகள் அதிகம் சேராது. எனவே இந்த திருவிழாவுக்கு 6 மாதத்திற்கு முன்னரே தங்கள் உடல் எடையை அதிகரிக்கும் பயிற்சியில் போட்டியாளர்கள் இறங்கிவிடுவார்கள்.
அதேபோல, இவர்கள் இந்த காலகட்டங்களில் தனி குடில்களில் தங்கவைக்கப்படுவார்கள். இதனால் பெண்களுடன் உடலுறவு கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. காலையில் சூரியன் விடிந்தவுடன் அவர்களுக்கு பால் கலந்த பசு ரத்தம் வழங்கப்படும். தினமும் ஒவ்வொரு பசுவிலிருந்தும் சிறு துளையிடப்பட்டு ரத்தம் எடுக்கப்படும். பின்னர் அந்த துளை களிமண் கொண்டு அடைக்கப்படும். இந்த ரத்தத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடித்துவிட வேண்டும். இல்லையெனில் ரத்தம் உறைந்துவிடும்.
போட்டிக்கு தயாராகும் இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு பணிவிடை செய்ய பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் போட்டியாளர்களுக்கு மது கொடுத்து, அவர்களின் வியர்வையை துடைத்துவிட்டு, தூங்காமல் இருக்க பாடல்களையும் பாடுவார்கள். ஆக இதையெல்லாம் அனுபவித்து, தடைகளையெல்லாம் கடந்து வருபவர்கள்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
போட்டியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுவிட்டால் அவர் தன் வாழ்நாள் முழுக்க அக்கூட்டத்தின் ஹீரோவாக கருதப்படுவார். இவரை திருமணம் செய்துகொள்ள அக்குழுவின் பெண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்படி போட்டி நடைபெறும். போட்டி முடிந்த பின்னர் சில நாட்களில் அந்த ஹீரோவின் எடை குறைந்துவிடும். ஆனாலும் அவர் ஹீரோதான்.
Read more: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்.. முதலமைச்சர் சொன்ன பதில்..