Big Breaking : பேரதிர்ச்சி..! ஒரே நாளில் ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை..! வெள்ளி விலை ரூ.25,000 உயர்வு..!

jewel n

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில், காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது… அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.25 உயர்ந்து ரூ.425க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்து, ரூ.4.25 லட்சத்திற்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : தங்கம் வாங்கப் போறீங்களா..? பட்ஜெட் வரை கொஞ்சம் பொறுங்க..!! காத்திருக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்புகள்..!!

RUPA

Next Post

10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! 28,740 பணியிடங்கள்.. இந்தியா போஸ்ட் மெகா வேலைவாய்ப்பு.. அதுவும் தேர்வு இல்லாமல்..!

Thu Jan 29 , 2026
நீங்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒரு பாதுகாப்பான அரசு வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்திய அஞ்சல் துறை (இந்தியா போஸ்ட்) உங்களுக்காக ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. ஆம்.. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தத் துறை கிராமின் தக் சேவக் (GDS) பதவிகளுக்கான ஒரு மாபெரும் ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், தேர்வுக்காக நீங்கள் எந்த எழுத்துத் தேர்வும் எழுத […]
india post job

You May Like