முன்னாள் முதல்வரும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவருமான ஓபிஎஸ் தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டார்.. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர், சிலர் திமுகவிற்கும், வேறு சிலர் தவெகவுக்கும் சென்றுவிட்டனர். ஓபிஎஸ்-ன் அரசியல் ஆதரவாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டார்.. இதனால் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது..
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.. மேலும் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும்,.. திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார். ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவார் அல்லது திமுக கூட்டணியில் இணைவார் என்று கூறப்பட்டது..
இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சேகர்பாபு ஒரே காரில் பயணம் செய்தனர்.. இருவரும் அண்ணா அறிவாலயத்திற்கு ஒரே காரில் பயணம் செய்தனர்..
இதையடுத்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு ஓபிஎஸ் வருகை தந்தார்.. அவரை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு உள்ளிட்டோர் முறையாக வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.. பின்னர் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்.எல்.ஏவுமான ஐயப்பனும் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்..
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. அவருக்கு போடி தொகுதி திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
Read More : Flash : நகை வாங்க சரியான நேரம்..! 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?



