பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் தாமரை, தற்போது திரைப்படத்தில் நடித்து வருவதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முதல் சீசன் பல எதிர்ப்புகளுடன் தொடங்கினாலும் அடுத்தடுத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிந்துவிட்டது. ஆரவ், ரித்திகா, முகென் ராவ், ஆரி, ராஜு ஜெயமோகன் என 5 சீசன்களின் வெற்றியாளர்களாக இவர்கள் இருந்தனர். தற்போது 6-வது சீசன் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதேசமயம், போட்டியாளர்கள் குறித்து தகவல்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், பிக்பாஸ் 5-வது சீசனில் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நபராக கலந்துகொண்டவர் தாமரை. கூத்துக்கட்டி நடித்து தனது வாழ்க்கையை நடத்திவந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்துள்ளது. தற்போது அவரைப் பற்றி ஒரு சூப்பரான செய்தி வந்துள்ளது. அதுஎன்னவென்றால், தாமரைக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படப்பிடிப்பு என்று பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஆனால், என்ன படம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.