பிக்பாஸ் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள்..!! தூக்கி வெளிய போடுங்க..!! திட்டித் தீர்த்த சீரியல் நடிகை லட்சுமி..!!

Bigg Boss 2025

பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் நடுவராக அறிமுகமானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், நிகழ்ச்சியின் தற்போதைய மந்தமான மற்றும் சர்ச்சைக்குரிய போக்கு, தொகுப்பாளரான அவருக்கே சலிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.


சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். “வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளுறது ரசிக்கும் படியாக இருக்கணும்… இல்ல சகிச்சுக் கொள்ளுற மாதிரியாவது இருக்கணும். ஆனா, இங்க சில பேர் நடந்து கொள்ளுறது சகிக்க முடியவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “இதெல்லாம் அவங்க தெரியாமல் எல்லாம் பண்ணல… தெரிஞ்சே தான் செய்யுறாங்க. ஆனா, சகிக்கிற அளவுக்கு இல்ல என்றதை அவங்களுக்கு சொல்லணும்” எனக் கூறினார்.

விஜய் சேதுபதியின் இந்த அணுகுமுறை நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சில சமயங்களில் அது ‘ஓவர் டோஸ்’ ஆகி, அவருக்கு எதிராகவும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவரான இயக்குநர் பிரவீன் காந்தி அளித்த பேட்டிகளில், விஜய் சேதுபதியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் செயல்பாடுகள் வரம்பு மீறிச் செல்வதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், சீரியல் நடிகை லட்சுமி மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் அளித்துள்ள பேட்டியில், “பிக்பாஸ் நிகழ்ச்சி கேவலத்தின் உச்சக்கட்டமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்களும், தொகுத்து வழங்குகிறவர்களும் இதைப் பார்த்துதான் வெளியிடுகிறீர்களா? உங்கள் வீட்டுக் குழந்தைகள் பார்க்கிறார்களா இல்லையா? கொஞ்சமேனும் சமூக அக்கறை இருக்கிறதா? இந்த கன்றாவியை ஒளிபரப்பி என்ன சாதிக்கப்போகிறீர்கள்?” நேரடியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

போட்டியாளர்களை அவர், “உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள். அவர்களை வெளியே தூக்கி போட்டு சுத்தம் செய்ய வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “அசிங்கமா பேசுபவர்களை விஜய் சேதுபதி கன்ட்ரோல் செய்ய வேண்டும்” என்றும் ஆவேசமாகக் கூறியுள்ளார். இதுபோன்ற அசிங்கங்கள் நடக்கும்போது மாதர் சங்கங்கள் மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More : கால்சியம் குறைபாடா..? மூட்டு வலியா..? பல நோய்களை தீர்க்கும் அருமருந்து..!! சீம்பாலை இப்படி செஞ்சி சாப்பிடுங்க..!!

CHELLA

Next Post

இப்படியே போச்சுனா நிலைமை ரொம்ப மோசமாகிடும்..!! இத்தனை குடும்பங்கள் அடிமையா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Sun Oct 26 , 2025
இந்தியாவில் இனிப்பு வகைகளை உட்கொள்ளும் பழக்கம் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக நீரிழிவு நோய் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, குறிப்பாக நகரங்களில் இனிப்பு நுகர்வு அதிகரித்திருப்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில், மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் இனிப்புகளைச் சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள […]
Diwali Sweets 2025

You May Like