பிக் பாஸ் சீசன் 6 இந்த வாரம் இவர்தான்! முக்கிய நபரை தட்டி தூக்கிய ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 பாகங்களை கடந்து 6வது பாகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த பிக் பாஸ் 6வது பாகம் தற்போது 50 தினங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். ஆனாலும் வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் விளையாட்டில் சரியாக கவனம் செலுத்தாமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சமூக வலைதள வாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.


குறிப்பாக குயின்சி, கதிரவன், ஜனனி என்று இந்த லிஸ்ட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்களைத்தான் சமூக வலைதளவாசிகள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த வாரம் யார் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த வாரம் தனலட்சுமியின் ஆட்டம் அதிகமாக இருந்ததால் அவர் மீது கடுப்பான ரசிகர்கள் கடைசி இடத்திற்கு அனுப்பியிருக்கின்றனர்.

Queency Bigg Boss tamil season 6 contenstant 1000x600 1

குயின்சியும் தனலட்சுமியும் கடைசி இடத்தில் இருக்கின்றனர். கதிர் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், ரட்சிதா, ஜனனி, நந்தினி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். கடைசியில் இருப்பதால் வழக்கம்போல் தனலட்சுமியை காப்பாற்றி, குயின்சி தான் இந்த வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Newsnation_Admin

Next Post

பிக்பாஸ்-6 வைல்ட் கார்டு என்ட்ரி இவர் தான்!!! தனலட்சுமிக்கு டஃப் கொடுக்கும் வகையில் நுழையவிருக்கும் புதிய விருந்தாளி..!

Fri Dec 2 , 2022
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் விறுவிறுப்பைத் தொட்டிருக்கிறது. அந்த வீட்டில் அனைதினமும் சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் என்று களை கட்டிக் கொண்டு வருகிறது. இதற்கு முன்பே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு புது பிரபலம் வரவிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்ற வாரம் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில், நடப்பு வாரம் குயின்சி இந்த வீட்டை […]
BBS6 Tamil ajay

You May Like